பள்ளிக்கல்வி இயக்குநர் காரைக்குடி பள்ளியில் ஆய்வு
காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆய்வு நடத்தினார்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர். ச. கண்ணப்பன் அவர்கள் நேற்று ஆய்வு செய்தார்.

தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்றனர்.. மாணவர்கள் பூங்கொத்து கொடுத்தும், கர ஓலி எழுப்பியும் வரவேற்றனர். பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு சாரணர் படை மாணவர்கள் மற்றும் இளஞ் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர்.

மாணவர்களின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை இயக்குநர் பார்வையிட்டார். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றதற்காக, தலைமையாசிரியர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்ட சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய இயக்குநர் பள்ளியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் திறன்களை அவர்களுடன் உரையாடி கேட்டறிந்தார்.

மாணவர்கள் தொடர்ந்து நன்றாக படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல் முருகன், மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications