ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை !
காரைக்குடி: மாணவிகள் முன் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பிரகாஷ் என்ற மாணவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததால் கோபம் அடைந்த வேதியியல் ஆசிரியர் ஜேம்ஸ் செல்வக்குமார், பிரகாஷை அடித்து வெளியில் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரகாஷ், பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துக் தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் முயன்றும் பிரகாஷை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரதேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆசிரியர் ஜேம்ஸ் செல்வக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications