தேர்வின்போது மாணவர்களை விக்ரம் பிரபு படப்பிடிப்பில் ஈடுபடுத்திய பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம்
சிவகங்கை: திருப்பத்தூர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நாள் அன்று மாணவர்களை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே தெக்கூரில் எஸ்.வி. கலாசாலை பள்ளி உள்ளது. விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்திற்கான படப்பிடிப்பு நேற்று காலை இப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அப்போது மதியம் தேர்வு எழுத வந்த பிளஸ் 1 மாணவர்களைத் துணை நடிகர்கள் சிலருடன் சேர்ந்து நிற்கவைத்து சீருடையில் உறுதிமொழி ஏற்கும் காட்சி படமாக்கப்பட்டது.

நேற்று பிளஸ் 1 ரிவிஷன் தேர்வு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு நடந்தது. இந்நிலையில் பள்ளி வளாகத்தினுள் படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது, அதில் மாணவர்களை பங்கேற்க செய்தது பெற்றோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிற மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். இன்றும் இப்பள்ளியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த சம்பத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்வு நாள் அன்று மாணவர்களை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்த பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications