காரைக்குடி பூங்காவில் ஒரு நாள்... மாணவர்களுடன்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வளர்க்கப்படும் தாவரங்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.

நேற்று நடந்த இக்களப்பயணத்தில் சுமார் 165 மாணவர்கள் பங்கு பெற்றனர். இகளப்பயணத்திற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா செய்திருந்தார். மாணவர்கள் பல வண்ணங்களில் உள்ள செம்பருத்தி, பல்வேறு வகையான குரோட்டன் செடிகள், மூங்கில் மரங்கள் போன்ற பசுமையான மரம், செடி, பூக்களைக் கண்டு ரசித்தனர்.

அங்கு வளர்க்கப்படும் வண்ண கிளிகளை கண்டு மகிழ்ந்தனர். அங்கே வளர்க்கப்படும் தாவரங்களின் அறிவியல் பெயர்களை மாணவர்கள் தெரிந்து கொண்டனர். நார்னியா திரைப்படத்தில் வரக்கூடிய கதாப்பாத்திரங்கள் இங்கு சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளதை மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அங்கு பார்த்தவற்றை மாணவர்கள் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டனர். மாணவர்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுதல், சண்டையிடாமல் ஒற்றுமையுடன் விளையாடுதல், விட்டுக்கொடுத்தல், பகிர்ந்தளித்தல், போன்ற நல்ல பழக்கங்களை இக்களப்பயணத்தில் மூலம் கற்று கொண்டனர்.

மாணவர்கள் ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். பட்டதாரி ஆசிரியர்கள் அனுராதா மற்றும் கோமதி ஜெயம் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications