அடங்கா காமம்.. சயின்ஸ் டீச்சரும்.. கணக்கு வாத்தியாரும்.. அபார்ஷன் முதல் கொலை வரை.. ஷாக் நாட்றம்பள்ளி

திருப்பத்தூர் ஆசிரியர் கொலையில் 8 பேர் கைதாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: கணக்கு வாத்தியாரும், சயின்ஸ் டீச்சரும் அடங்கவே இல்லை.. காமம் தலைக்கேறி இவர்கள் செய்த அட்டகாசத்தினால், கொடூர கொலை வரை நடந்து முடிந்துள்ளது..!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள பகுதி ராமகிருஷ்ணாபுரம்.. இங்கு ஒருவர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. அவரது தலை நசுங்கி இருந்தது.. கை கால்கள் எல்லாம் ரத்த காயங்கள் கிடந்தன..

இந்த தகவல் போலீசாருக்கு தெரியப்படுத்தப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. கொலை செய்யப்பட்டவரின் தலை நசுங்கி இருந்ததால், அவர் யார் என்ற அடையாளம் முதலில் தெரியவில்லை..

 ஊத்தங்கரை

ஊத்தங்கரை

பிறகுதான்., கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கங்காவரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பதும் 37 வயசாகிறது என்பதும், ஊத்தங்கரை அடுத்த ஜோதிநகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணக்கு வாத்தியாராக வேலை பார்த்து வருபவர் என்பதும் தெரியவந்தது. ஆனால், யார் கொலை செய்தது? என்ன காரணம் என்று தெரியவில்லை.. அதனால் போலீசார் தீவிர விசாரணையை அவரது பள்ளியில் இருந்தே ஆரம்பித்தனர்..

கர்ப்பம்

கர்ப்பம்

அப்போது, கணக்கு வாத்தியார் 5 பெண்களுடன் தகாத உறவை வைத்திருந்தது தெரியவந்தது.. 5 பெண்களுடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார்.. இதைதவிர, மாணவி ஒருவரையும் நாசம் செய்திருக்கிறார்.. அந்த மாணவி 8-ம் வகுப்பு படிக்கிறாராம்.. எதைஎதையோ பேசி, அந்த சிறுமியை மயக்கி, சீரழித்து உள்ளார்.. பிறகு அந்த சிறுமி கர்ப்பமானதும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அபார்ஷனும் செய்ய வைத்திருக்கிறார்.. தனக்கிருக்கும் செல்வாக்கினால், இப்படியெல்லாம் தப்பு மேல் தப்பாக செய்து வந்துள்ளார் கணக்கு வாத்தியார்.

 கணக்கு

கணக்கு

இதெல்லாம் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இவர்களில் யார் கணக்கு வாத்தியாரை கொன்றிருப்பார்கள் என்று அடுத்த டவுட் போலீசாருக்கு ஏற்பட்டது. அப்போதுதான், லட்சுமி என்பவர் சிக்கினார்.. இவர் அதே பள்ளியில் சயின்ஸ் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.. லட்சுமிக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. அவரது கணவர் பெயர் இளங்கோ.. இவர்கள் லவ் மேரேஜ் செய்தவர்கள்..!

உல்லாசம்

உல்லாசம்

ஆனால் லட்சுமி காதல் கணவனை மறந்து, கணக்கு வாத்தியாருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.. இவர்கள் பல இடங்களில் ஊர் சுற்றியும் வந்துள்ளனர்.. ஒருநாள் இந்த கள்ளக்காதல், இளங்கோவுக்கு தெரிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, கணக்கு வாத்தியாரை நேரில் சென்று பலமுறை வார்ன் செய்தார்.. கள்ளக்காதலை விட்டுவிடும்படி சொல்லி உள்ளார்..

 கூலிப்படை

கூலிப்படை

ஆனாலும், இந்த கள்ள ஜோடி அடங்கவில்லை.. இதனால் பொறுமை இழந்த இளங்கோ, கணக்கு வாத்தியாரின் கை, காலை உடைத்து போட்டால் வழிக்கு வருவார் என்று நினைத்தார்.. அதற்காகவே ஒரு கூலிப்படையையும் லட்சக்கணக்கில் பணம் தந்து செட்டப் செய்துரள்ளார். சம்பவத்தன்று, ஸ்கூலுக்கு போய் கொண்டிருந்த கணக்கு வாத்தியாரை, காரில் பின்னாடியே சென்ற கூலிப்படையினர், அப்படியே தூக்கி உள்ளே போட்டு கடத்தி கொண்டு சென்றுவிட்டனர்..

 பங்களாமேடு

பங்களாமேடு

காருக்குள்ளேயே அவரது கை, கால்களை உடைத்தனர்.. முறித்தனர்.. இதில் கணக்கு வாத்தியார் மயங்கிவிழவும், எங்காவது தூக்கி வீசிவிடலாம் என்று காரை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளனர். பங்களாமேடு பகுதியில் யாரும் இல்லாததால், கை, கால்களை உடைத்து, கயிற்றால் கட்டி தூக்கி வீசி எறிந்துள்ளனர்.. அப்போதுதான் கணக்கு வாத்தியார் முனகி இருக்கிறார்..

 கொலை

கொலை

அதை பார்த்ததும் பயந்துபோன கூலிப்படையினர், எங்கே நம்மை சிக்க வைத்துவிடுவாரோ என்று நினைத்து, அதே காரில் கணக்கு வாத்தியாரின் தலையை ஏற்றி நசுக்கி உள்ளனர்.. இதில் அங்கேயே வாத்தியார் உயிர் பிரிந்துவிட்டது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சயின்ஸ் டீச்சர், அவரது கணவர் இளங்கோ உட்பட மொத்தம் 8 பேரை தூக்கி உள்ளே வைத்துள்ளது போலீஸ்..!

 சம்பளம்

சம்பளம்

அரசாங்க வேலை, அதுவும் ஒரு கவுரமான வேலை, கை நிறைய சம்பவம், ஏகப்பட்ட விடுமுறைகள், என இவ்வளவும் இருந்தும், கணக்கு வாத்தியாருக்கும் சரி, சயின்ஸ் டீச்சருக்கும் சரி, மனம் பேதலித்து அலைந்ததை என்னவென்று சொல்வது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+