சென்னை, காஞ்சி, திருவள்ளூர், புதுவை, காரைக்காலில் டிச. 6 வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதிவரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல புதுச்சேரியிலும், காரைக்கால் மாவட்டத்திலும் டிசம்பர் 6வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கன மழை நீடிப்பதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்தாலும், உடனடியாக மழை குறைய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளநீரால் மக்கள் தவித்து வருகின்றனர். பல பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. பல பள்ளிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளன. இதனால் சென்னை மாவட்டத்தில் டிசம்பர் 6ம் தேதி வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 6ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6 வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர், விழுப்புரம் மற்றும் நாகையில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் டிசம்பர் 6ம் தேதி வரை பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications