கொளுத்தும் வெயில்... புதுவையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் முதல் தேதி பள்ளி திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் தேதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் கோடை வெயில் காரணமாக ஜூன் மாதம் 6 ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அந்த மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது
இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுவையில் அரசு மறறும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலின் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் துவங்கும் நாள் ஜூன் 6-ம் தேதி (திங்கள்கிழமை) ஆக மாற்றி அறிவிக்கப்படுகிறது.
மேலும் இடைப்பட்ட இவ்விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என குமார் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications