சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு டிச.13-ல் மீண்டும் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. 1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.

இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இந்தச் சங்கத்துக்கு தேர்தல் நடந்து இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் மீண்டும் தேர்தல் வருவதற்கு தலைவி நளினியே காரணம் என்கின்றனர். நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். வேறு வழி இல்லாமல் நளினியும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் 3 அணியினருக்கிடையே போட்டி நிலவுகிறது. பானுபிரகாஷ், மனோபாலா, டெல்லிகணேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும், சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் ஆகியோர் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.
ரவிவர்மா, கனகப்பிரியா ஆகியோர் மற்றொரு அணியாக தேர்தலைச் சந்திக்கின்றனர்.1,300 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மகாலில் டிசம்பர் 13 ம் தேதி நடைபெறவுள்ளது. சமீபத்தில் தான் சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பாக நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் தலைமை மீது ஏற்பட்ட அதிர்ப்தியின் காரணத்தால் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறையவது சரியான தலைமையைத் தேர்வு செய்வார்களா என்பது டிவி ரசிகர்களின் கேள்வியாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications