Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாஜகவும், திமுகவும் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். என்ன நடந்தது?

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அல்லது கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கடந்த 6 மாத காலமாகவே, பல்வேறு தகவல்கள் வட்டமடித்து கொண்டேயிருந்தன..

Se ku Thamilarasan supports AIADMK and criticized BJP Nirmala sitharaman DMK Government who is this election for

ஒருவேளை தன்னுடைய சொந்த மாநிலம் தமிழ்நாடு அல்லது கணவரின் மாநிலமான ஆந்திராவில் நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால், இந்த கணிப்புகள் எல்லாமே நொறுங்கிவிட்டன.

பேட்டி: நேற்று முன்தினம், தனியார் டிவி சேனலுக்கு பேட்டி தந்திருந்த நிர்மலா சீதாராமன், "தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்கிட்ட பணம் இல்லை. அதுவும் இல்லாமல், தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும்.. அதனால் நான் போட்டியிடவில்லை" என்றார்..

ஒரு நாட்டின் நிதியமைச்சராக இருந்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று சொல்கிறீர்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது... அதற்கு நிர்மலா சீதாராமன், "நான் கையாளும் நிதி இந்தியாவுக்கானது... அது எனக்கானது இல்லை. என்னுடைய சம்பளம், வருமானம், சேமிப்பு மட்டுமே எனக்கானது. மற்றவை எல்லாம் இந்தியாவுக்கான நிதி'' என்று கூறி விளக்கம் தந்திருக்கிறார்.

செல்வப்பெருந்தகை: நிர்மலா சீதாராமன் இப்படி சொன்னதுமே, தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "அப்படின்னா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விட, தமிழிசை, எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல், எந்தவித சிரமமும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இவர்கள் எல்லாம் ஆசைப்படுகிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.

இதுபோலவே, நிர்மலா சீதாராமன் கருத்தை இந்திய குடியரசு கட்சியும் கடுமையாக விமர்சித்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ளும். இந்த தேர்தலில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்தவித வளர்ச்சியும் கொண்டு வராத, பாஜக ஆட்சியை மக்கள் வீழ்த்த வேண்டும்.

திமுக அரசு: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியினால் நாட்டில் ஏழை, பணக்காரர்கள் விகிதம் தான் அதிகரித்துள்ளது. மக்கள் வளர்ச்சிக்கும், ஒருங்கிணைப்புக்கும் எந்த ஒரு திட்டங்களும், கொள்கைகளும் செயல்படுத்தவில்லை.

தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக ஆட்சி நடத்தும் திமுகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதிய திட்டங்கள், கொள்கைகள் கொண்டு வரவில்லை. இந்த தேர்தல் ஏழைகளுக்கான தேர்தலாக இல்லை.

என்ன காரணம்: உதாரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தேர்தலில் போட்டியிடவில்லையா? என்று கேட்டபோது, தன்னிடம் அந்த அளவுக்கு பண வசதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் இந்த தேர்தல் யாருக்கானது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் செலவுக்காக 95 லட்சம் ரூபாயும், அந்த வேட்பாளர் ஆதரிக்கும் கட்சி சார்பில் 25 லட்சம் ரூபாய் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஆனால், இந்த நாட்டில், 24 கோடி மக்கள் இன்னமும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 270 ரூபாய் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.. அதிலும், இவர்களில், பெரும்பாலானவர்கள் 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே இருக்கிறார்கள்..

முக்கியத்துவம்: ஆக, 8 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.. 12 கோடி மக்களுக்கு வீடு இல்லை.. அதனால், இந்த தேர்தல் ஆரோக்கியமான தேர்தலாக தெரியவில்லை. இந்த தேர்தல் அரசியல் கட்சி மற்றும் அதை சார்ந்தவர்களுக்கான தேர்தலாக மட்டுமே உள்ளது" என்று பாஜக மீதான விமர்சனத்தை கடுமையாக முன்வைத்திருக்கிறார் செ.கு.தமிழரசன்.

பாஜகவை சரமாரியாக குற்றஞ்சாட்டி, அதிமுகவுக்கான ஆதரவை தற்போது செ.கு.தமிழரசன் அளித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

ஜெயலலிதா: காரணம், மிகச்சிறந்த அரசியல்வாதியான செ.கு.தமிழரசன் அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில் செல்வாக்குடன் வலம் வந்தவர்.. 80'களின் இறுதியில் இருந்து இவரது அரசியல் பயணத்தை துவங்கினார்.. மறைந்த ஜெயலலிதா மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தவர். அதேபோல, ஜெயலலிதாவும் இவர் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்தவர். அதனால்தான் தற்காலிக சபாநாயகராக தமிழரசனை உயர்த்தி அழகு பார்த்தார்..

எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, செ.கு. தமிழரசனுக்கென்று ஒரு தொகுதியை ஒதுக்கிவிடுவது ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்திருக்கிறது.. இந்த வழக்கம், அவர் மறையும்வரை மாறவேயில்லை... ஆனால், ஜெயலலிதா மறைந்தவுடன், கட்சி துண்டாடப்பட்டதுமே, செ.கு. தமிழரசனுக்கு அதிமுக மீதான ஈர்ப்பு மெல்ல குறையவும், அரசியலில் சற்று ஒதுங்கியே இருந்தார்..

இடஒதுக்கீடு: பிறகு திடீரென மநீம தலைவர் கமலுடன் கூட்டணி வைத்து, கடந்த முறை எம்பி தேர்தலை சந்தித்தார்.. அதற்கு பிறகு மறுபடியும் அரசியலில் தீவிர தன்மை இல்லாமல் இருந்தநிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும், யாருக்குமே ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டார்..

காரணம், தலித் மக்களுக்கு துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், 18 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கும்படி கோரிக்கை விடுத்தும், திமுக, அதிமுக கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்பதை, அன்றைய தினம் ஆதங்கத்துடன் பதிவு செய்திருந்தார்.

அதற்கு பிறகு, செ.கு. தமிழரசனின் அரசியல் செயல்கள் குறைந்தே காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.. 4 நாட்களுக்கு முன்புகூட, சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழரசன் சந்தித்து பேசியிருந்தார்.. ஆனால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை..

எகிறும் எதிர்பார்ப்பு: அநேகமாக, அடுத்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் 2 பேரும் ஆலோசனை செய்ததாக, தகவல் வெளியாகியிருந்ததே தவிர, உண்மைத்தன்மை தெரியவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், தனக்கு "ஆல்டைம்" நெருக்கமான கட்சிக்கு ஆதரவை அபரிமிதமாக அளித்து, தன்னுடைய வலிய பிரச்சாரத்தையும் முன்னெடுப்பதாக மூத்த தலைவர் தமிழரசன் அறிவித்திருப்பது, அதிமுகவுக்கான பலத்தை அதிகரிக்கச்செய்யும் என்றே நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+