ஜெயாவின் சிறிதாவூர் பங்களாவை சோதனையிடுங்கள்: ராஜேஷ் லக்கானியிடம் திமுக மனு
சென்னை: வாக்காளர்களுக்கு அளிக்க சிறிதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

மாநிலம் முழுவதும் தேர்தல் அதிரடிப் படையினரால் கணக்கு வழக்கில்லாத பணம் கைப்பற்றப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன; ஆனால் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் வைக்கப்பட்டிருக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் வளாகங்களில் இப்படியான சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சென்னையை அடுத்த சிறுதாவூர் பங்களாவில் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் 10 கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு வாக்காளர்களுக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாகவும் பின்னர் அந்த லாரிகள் அங்கிருந்து வேறிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் காட்சி ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் படத்துடன் செய்திகள் வந்துள்ளன.
எனவே, அந்த வாகனங்களின் நடமாட்டம் குறித்தும் அந்த பங்களாவிலும் உடனடியாக முழுமையாக சோதனை நடத்தப்படுவது முறையாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு அவசியமானது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது தவிர தேர்தல் விதிகளை மீறி ஆளும் கட்சியினர் கூட்டுறவு சங்க அலுவலகங்களை தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதாகவும், புதிதாக ஆட்டோ உரிமங்கள் வழங்கப்படுவது குறித்தும் திமுக சார்பில் தனித்தனியாக மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications