29 பேருடன் மாயமான ஏஎன் 32 விமானம்: தேடும் பணி இரவிலும் தொடரும்; பாதுகாப்புத்துறை தகவல்
சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பாம்ரே தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றும், முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 29 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாயமான விமானத்தை தேடும் பணி இரவிலும் தொடரும் என பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பாம்ரே கூறியுள்ளார். மேலும், மிகப்பெரிய அளவில் தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விமானத்தை தேடும் பணியானது இரவிலும் தொடரும். சென்னையில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் மாயமாகி உள்ளது. விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது, என்று கூறிஉள்ளார்.
தேடுதலில் அதி நவீன விமானம்
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி விமானப்படை தளத்தை சேர்ந்த இரண்டு அதிநவீன விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications