கூடங்குளம் 2வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு அக்டோபார் 22ம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்த மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை அடைய 8 மாதங்கள் பிடித்தது. இதனைத் தொடர்ந்து 2வது அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இதையடுத்து 2-வது அணு உலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கி சோதனை அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது. அதிகபட்சமாக 300 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்பட்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பபட்டது.
முதலில் மின்சாரம் தயாரிக்கும் போது அடிக்கடி ஆய்வுக்காக மின் உற்பத்தி நிறுத்தம் செய்து மீண்டும் உற்பத்தி செய்வது வழக்கம். அதன்படி 2-வது அணுஉலையில் மின்சாரம் தயாரிப்பது கடந்த மாதம் 6-ம் தேதி நிறுத்தப்பட்டது. டர்பைன் இயக்குவதும், அணுப்பிளவும் நிறுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. நீராவி வால்வுகள், அணு உலையை நிறுத்தும் வால்வுகள் போன்றவை எப்படி செயல்படுகின்றன என்று ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இன்று மாலை 6.14-க்கு மின் உற்பத்தி தொடங்கியபோது 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அது படிப்படியாக உயர்த்தப்பட்டு முழு அளவான 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications