சசிகலா வருகையால் கூவத்தூரில் போலீஸ் குவிப்பு - பொதுமக்களுக்கு கெடுபிடி
கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா வந்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட போலீசார் கெடுபிடி விதிப்பதால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
சென்னை: எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சசிகலா வந்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் நடமாட போலீஸ் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று இரு அணி உருவாகியுள்ளது. ஓபிஎஸ் பக்கம் பலரும் சென்று வருவதால் சசிகலா அணி ஆட்டம் கண்டுள்ளது.

முதல்வர் நாற்காலியில் ஒருநாளாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார் சசிகலா. இதற்காக ரிசார்ட்டில் எம்எல்ஏக்களைப் பார்த்து சமாதானமாக பேசி வருகிறார். ஒரே குடும்பம், ஓபிஎஸ் பக்கம் மட்டும் சென்று விட வேண்டாம் என்று பேசி வருகிறார் சசிகலா.
சசிகலாவின் வருகையால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூவத்தூர் கிராம மக்களை அந்த ஊருக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக மன்னார்குடி ரவுடி கும்பலின் அட்டகாசத்தால் கடும் இன்னல்களை சந்தித்து வரும் மக்கள், சசிகலா மற்றும் போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சசிகலாவும் எம்.எல்.ஏக்களுடம் உடனே கூவத்தூரை விட்டு வெளியேறாவிட்டால் முற்றுகைப் போராட்டத்தை நடத்தப் போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
குடும்பத்துடன் சாலையில் படுத்து போராடுவோம் என கூவத்தூர் பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். வேலைக்கு சென்றவர்கள் மாலையில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். கடந்த 4 நாட்களாக அதிமுக அடியாட்கள் மிகுந்த தொல்லை தருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றம் உருவாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications