வைகோவுக்கு "பர்ஸ்ட் கிளாஸ்".. புழல் சிறையில்!
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைகோவுக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழாவில் ஈழப் படுகொலைகள் குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்தும் வைகோ பேசினார்.
இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ.

விரைந்து முடியுங்கள்
தேச துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் என்னை கைது செய்யுங்கள் என்று வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி வைகோவை சிறையிலடைக்க உத்தரவிட்டது.

ஜாமீன் வேண்டாம்
ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என கூறியதால் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 15 நாள் சிறை வாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் முடக்கம்
வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி கட்டுபவர், அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் வைகோவுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்ன என்ன வசதிகள்
வைகோவுக்கு ஒரு மின்விசிறி, கட்டில், தலையணை, போர்வை, நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. மேலும் அவர் படிப்பதற்காக தினமும் ஒரு ஆங்கில மற்றும் ஒரு தமிழ் பத்திரிகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர் விரும்பினால் சிறை நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வைகோ மௌன விரதம்
சிறையில் உள்ள வைகோ இன்று வழக்கம் போல் நடைபயிற்சியை மேற்கொண்டார். பின்னர் இன்று அவரது தந்தை வையாபுரியாரின் நினைவு நாள் என்பதால் சோகமாக காணப்பட்ட வைகோ மௌன விரதத்தை கடைபிடித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications