தேச துரோக வழக்கு.. வைகோ கோர்ட்டில் ஆஜர்.. விசாரணை 17ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
தேச துரோக வழக்கில் வைகோ இன்று நேரில் ஆஜரானார். விசாரணை இம்மாதம் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை: கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

முன் வந்து..
இந்நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், தானாக முன் வந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜரானார் வைகோ.

ஜாமீன் வேண்டாம்
அப்போது, நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறியதையடுத்து, சிறையிலடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீன் வேண்டும் என்று வைகோ கடந்த மாதம் 22ம் தேதி மனு செய்திருந்தார்.

ஜாமீனில் விடுதலை
அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் மே மாதம் 24ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்து வைகோ ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் வைகோ நேரில் வந்து நீதிமன்றத்தின் முன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 17ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

குற்றமற்றவர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தான் குற்றமற்றவர் என்று கூறினார். அதே வேளையில் தான் பேசிய எந்தப் பேச்சை திரும்பப் பெற மாட்டேன் என்று உறுதியுடன் கூறினார்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications