சம்மனை கிழிப்பது என் இஷ்டம்! அதை ஃபிரேம் போட்டு பூஜை அறையிலா மாட்ட முடியும்? சீமான் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: சம்மனை கிழிப்பது என் இஷ்டம் என்றும் அதை என்ன பூஜை அறையிலா மாட்ட முடியும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் மகளிரணியினர் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் வெளியூரில் இருப்பது தெரிந்தும் என் வீட்டிற்கு எதற்காக சம்மன் கொடுக்க போலீஸார் போகிறார்கள்.

Seeman Vijayalakshmi NTK

வீட்டில் இருக்கும் என் மனைவியிடம் சம்மனை கொடுத்திருக்கலாமே! அதைவிட்டுவிட்டு சம்மனை கேட்டில் ஒட்டியது ஏன், சம்மன் நான் படிப்பதற்காகவா இல்லை நாட்டு மக்கள் படிப்பதற்காகவா?

சம்மனை கிழிப்பது அவ்வளவு குற்றமா. ஒரே நேரத்தில் 4 சம்மன்களை அனுப்புகிறார்கள். நான் ஒருவர்தானே. சம்மனை கிழிக்காமல் கட்டம் போட்டு அதை பூஜை அறையிலா மாட்ட முடியும்

ஒரு பெண் என் மீது புகார் கொடுத்தால் குற்றமாகிவிடுமா. இது ஒரே வழக்குதான். ஏற்கெனவே காவல்துறையிடம் விளக்கம் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு 3 மாதம் காலஅவகாசம் கொடுத்திருக்காங்க. அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்.

பெங்களூருக்கு சென்று நடிகையிடம் விசாரிக்கும் காவல் துறை, என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வா வா என்கிறீர்களே! பெங்களூருக்கு வரும் போது ஒசூரில் இருக்கிற என்னிடம் விசாரிக்க முடியாதா?

நான் என்ன தலைமறைவாகிவிட்டேனா. எதற்காக வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டார்கள். சரி ஒட்டிட்டாங்க, அத்துடன் காவல் துறையோட வேலை முடிந்துவிட்டது. அந்த சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் என் இஷ்டம். அதை கிழிக்காமல் பூஜையறையில் வைத்து கட்டம் போட்டு பூஜையா செய்ய முடியும்?

என் வீட்டில் இருப்போரை ஏன் அடிக்கிறீர்கள். ஏற்கெனவே இந்த வழக்கில் நான் நேரில் ஆஜராகியிருக்கிறேன். சம்மனை எனக்கு தானே கொடுக்க வந்தீர்கள். வீட்டுக் கதவில் ஒட்டினால் கதவா விசாரணைக்கு வரும்? எங்கள் வீட்டில் கைது செய்யப்பட்டோரை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லாமல் வேறு எங்கேயோ கூட்டிக் கொண்டு போய் அடித்திருக்கிறார்கள்.

எனக்கு வாட்ஸ் ஆப்பிலேயே சம்மன் அனுப்பியிருக்கலாம். என் வீட்டுக்கு நீலாங்கரை காவல் துறை ஏன் சென்றது? சம்மனை ஒட்டிச் சென்ற பிறகு எதற்காக வீட்டிற்கு சென்றார்கள்.

எனக்கு வசதியான நேரத்தில் தான் காவல்துறையிடம் விசாரணைக்கு ஆஜராவேன். காவல்துறை ரொம்ப விரும்புறதால, இன்னைக்கு செல்வேன், போவேன் என கூறினார். 2 நாட்களுக்கு முன்புகூட பேரம் பேசியதாகவும், 2 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் உங்கள் தரப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறதே என்ற கேள்விக்கு, அவங்க தரப்பில் தான் அழைத்தார்கள்... பின்னர் அவர்கள் தொடர்பு எல்லைக்குள் வரவில்லை என சீமான் விளக்கமளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+