தை பூசத்துக்கு அரசு விடுமுறை கோரி போராட்டம்- நாம் தமிழர் ஆட்சியில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு:சீமான்
மதுரை: உலகம் முழுவதும் 13 கோடி தமிழர்கள் கொண்டாடும் தை பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை விடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் தை பூசத்தை ஒவ்வொரு ஆண்டும் பெருவிழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். உலகிலுள்ள 13 கோடி தமிழர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தைப் பூசம் - விடுமுறை நாள்
தமிழகத்தில் பிற மொழி தினங்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழர்களின் முக்கிய திருவிழாவான ஜனவரி 25-ந்தேதி கொண்டாடப்படும் தைப் பூச நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

நாம் தமிழர் ஆட்சியில்..
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். ஊழலை உலகத்துக்கே கொண்டு சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் தான் தற்போது அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.

234 தொகுதி வேட்பாளர்கள்
சட்டசபை தேர்தலில் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து தொகுதி வேட்பாளர்களையும் அறிவிப்போம்.

நிலம் சார் தொழில்களுக்கு முன்னுரிமை
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் விவசாயம், கால்நடை வளர்ப்பு, பயிர் உற்பத்தி என நிலம் சார்ந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications