For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஸ்பாட்லேயே இல்ல.. திருச்சி விமான நிலைய அடிதடி வழக்கில் முன்ஜாமீன் கோரி சீமான் மனு!

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்ஜாமீன் கோரி சீமான் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்ஜாமீன் கோரி சீமான் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த சனிக்கிழமை காலை திருச்சி சென்றனர். இருவரும் ஒரே விமானத்தில் சென்றனர்.

இருவரையும் வரவேற்க அவர்களது கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கத்தினர்.

நாம்தமிழர் மதிமுக மோதல்

நாம்தமிழர் மதிமுக மோதல்

இதனால் இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

பெரும் பதற்றம்

பெரும் பதற்றம்

இதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் கொடிக்கம்பத்தை கொண்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சீமான் மனுத்தாக்கல்

சீமான் மனுத்தாக்கல்

இதுதொடர்பாக சீமான் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சீமான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நான் ஸ்பாட்லேயே இல்லை

நான் ஸ்பாட்லேயே இல்லை

திருச்சி விமான நிலையத்தில் மோதல் நடைபெற்ற போது நான் அந்த பகுதியிலேயே இல்லை என சீமான் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

English summary
NTK chief secretary Seeman filed anticipatory bail petition in high court Madurai Bench. NTK and MDMK workers attacked each in Trichy airport on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X