திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பாஜகவைத் தொடர்ந்து சீமானும் எதிர்ப்பு
பாஜகவைத் தொடர்ந்து சீமானும் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜகவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சனைகளுக்காக திமுக சென்னையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

அதேநேரத்தில் பாஜக மற்றும் அதிமுக அணிகளுக்கு திமுக அழைப்பு அனுப்பவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திமுகவுக்கு தகுதி இல்லை எனக் கூறியிருந்தார்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திமுகவும் தகுதி இல்லை என தமிழிசையைப் போலவே கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் விவசாயிகளின் துயரத்துக்கு காரணமே திமுகதான் காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார் சீமான்.
அண்மையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் தலை சிறந்த இந்துத்துவா தலைவராக சீமான் வளர்ந்து வருகிறார் என பாராட்டு தெரிவித்திருந்தார். தற்போது பாஜகவின் அரசியல் நிலையை பின்பற்றி சீமானும் கருத்துகளைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications