இலவச அரிசிக்கு மக்களைக் கையேந்த வைத்த அரசு... எப்படி வளரும் இந்த நாடு?: சீமான் ஆவேசம்
கரூர்: சொந்த நாட்டு மக்களை இலவச அரிசிக்காக கையேந்த வைத்துள்ளது எப்படி ஒரு அரசின் சாதனையாக இருக்க முடியும் என திண்டுக்கல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.
இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தவமணி பத்மாநாபனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் பயனற்றது எனக் குற்றம் சாட்டினார். மேலும், இது குறித்து அவர் தனது பிரச்சாரத்தில் கூறியதாவது:-

பயன் இல்லாத திட்டம்...
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது.எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.அப்படி பயன் இல்லாத திட்டங்கள் எதற்காக.சொந்த நாட்டு மக்களை இலவச அரிசிக்காக கையேந்த வைத்துள்ளது எப்படி ஒரு அரசின் சாதனையாகும்.

நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம்...
எங்கள் ஊரில் கண்மாய்க் கரையில் அமர்ந்து ஆண்கள் சீட்டு ஆடுகிறார்கள். பெண்கள் பல்லாங்குழி ஆடுகிறார்கள். கேட்டால் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் என்கிறார்கள்.

எப்படி வளரும்?
ஆனால் அதே கிராமத்தில் விவசாய வேலை செய்ய ஆள் இல்லை என்ற நிலை உள்ளது. பொருளாதரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது.இந்தத் தேசம் எப்படி வளரும்...?

மாற்றம் தேவை...
ஊழல் பெருகி நாட்டின் முன்னேற்றம் சீரழிந்துள்ளது அதனால் மாற்றத்தை கொண்டுவர இந்தத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுதிக்கொள்ளவேண்டும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications