என் தம்பி முத்து.. நீ என் தமிழாய்... என் தாயாய்... என் மூச்சாய் இருப்பாய் முத்து.. சீமான் கவிதாஞ்சலி
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான நா. முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று.
சென்னை: கவிஞர் நா. முத்துக்குமாரின் மறைவிற்கு சீமான் பாடிய உருக்காமான இரங்கல் பாடல் இதோ..
ஏன் இப்படிச் செய்தாய் முத்து?
என் தம்பியே!
இளங்கவியே!
ஈடுஇணையற்ற ஆற்றலே!
என்னுயிர் இளவலே!
முத்துக்குமரா!

என்னை விட்டு
நீ எங்குச் சென்றாயடா?
ஏன் இப்படிச் செய்தாய் முத்து?
உன்னைப்போல் பாக்கள் எழுத
இங்குப் பல தம்பிகள் வருவார்கள்.
உன்னைப்போலப் பாசமுள்ள தம்பி
எனக்கு யாரடா கிடைப்பார்?
உன்னை எவ்வளவு நம்பி இருந்தேன்
ஏனடா தம்பி?
என்னை வெம்பித் துடிக்கவிட்டு
வெகுதூரம் சென்றாய்?
ஒரு தட்டில் உண்டோம்!
ஒரு கூட்டில் உறங்கினோம்!
பலநாட்கள் பசித்துக் கிடந்தோம்!
கனவையே உணவாக்கினோம்!
எழுந்தோம்!
கவலைகளைத் தொலைத்தோம்!
கண்ணீரைத் தண்ணீரில் கரைத்தோம்!
இலக்கைக் குறித்தோம்!
நான் எண்ணியது போலவே
நீ சாதனை பல செய்து சாதித்தாய்!
இன்று ஏனடா என் தம்பி?
வேதனை தந்து
உன் சாவால் என்னைச் சோதித்தாய்?
அறிவைச் சேமித்த நீ!
பணத்தையும், உடல்நலத்தையும் சேமிக்கவில்லையடா!
நட்பை உயிராய் மதித்த நீ!
உன்னுயிரை ஏன் மதிக்கவில்லை என் முத்து?
நீ இந்த இனத்தின் சொத்து என்பதை
ஏனடா மறந்தாய் என் தம்பி?
நீ ரசிக்க
இன்னும் எவ்வளவு இயற்கை இருக்கிறது?
நீ எழுத
எவ்வளவு தமிழ் இங்குத் தவம் கிடக்கிறது?
எத்தனை செவிகள்
உன் பாடல் கேட்க...
எத்தனை நட்பு
உன் கைகுலுக்க...
காத்துக்கிடக்கிறது!
நீ வருவாயா!
என் தம்பி!
அண்ணன் வரும்போதெல்லாம்
எழுந்து நிற்கும் நீ!
உன்னருகில் நின்று
உன் அண்ணன் அழுதபோது
நீ ஏனடா?
எழாமல் படுத்தே கிடந்தாய்?
என் பாசத்திற்குரியவனே!
ஏன் இப்படி
என்னை மோசம் செய்தாய்?
என் தம்பி முத்து!
இப்போது நீ எங்கு இருப்பாய்?
காற்றில் இருப்பாயா?
நீரில் இருப்பாயா?
நிலத்தில்?
மரத்தில்?
வானத்தில்?
எங்கு இருப்பாய் என் முத்து?
இருப்பாய்!
இருப்பாய்!
என் தாயாய்!
என் தமிழாய்!
என் மூச்சாய்!
என் பேச்சாய்!
இருப்பாய் எனக்குள்ளே!
நீ இருப்பாய் முத்து!
இருப்பாய்!
- செந்தமிழன் சீமான்
இந்த வீடியோவை சீமான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ல் பதிவிட்டிருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications