கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும்... திமுகவை ஆதரித்தால் அவரையும் எதிர்ப்போம்... சீறும் சீமான்!

நடிகர் கமல்ஹாசன் திமுகவை ஆதரித்தால் அவரையும் எதிர்ப்போம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஊழல் செய்த திமுகவை நடிகர் கமல்ஹாசன் ஆதரித்தால் அவரையும் எதிர்ப்போம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரிய போது மாநகராட்சி சாலைகளாக மாற்றி அதனை அரசு திறந்தது. ஒரு வேளை சிவாஜி சிலையை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டுமெனில் அதனை இதே கடற்கரை சாலையில் உள்ள பிற தலைவர்களின் சிலை போல ஒரு இடம் ஒதுக்கி இங்கேயே நிறுவ வேண்டும்.

 போராட நேரிடும்

போராட நேரிடும்

சிவாஜி சிலையை நினைவு மண்டபம் கட்டும் இடத்தில் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடத்தப்படும். இது எச்சரிக்கை என்றால் எச்சரிக்கை, அரசு சிலையை அகற்ற முயற்சித்தால் தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தும், பெரும் போராட்டத்தை நாங்கள் முன்எடுக்க வேண்டி வரும்.

 கமலை வரவேற்கிறேன்

கமலை வரவேற்கிறேன்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஊழல் மட்டுமே பிரச்னையல்ல கதிராமங்கலம் போராட்டம், புதுக்கோட்டை ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கும் அவர் குரல் கொடுக்க வேண்டும்.

 திராவிட கட்சிகளால் தான் ஊழல்

திராவிட கட்சிகளால் தான் ஊழல்

திமுகவை கமல்ஹாசன் ஆதரித்தால் அதையும் நாங்கள் எதிர்ப்போம். முதலில் கமல்ஹாசன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இந்த ஆட்சியில் இருக்கும் எடப்பாடி அரசு மட்டும் ஊழல் செய்யவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மேலோங்கிய காலம் தொட்டு தான் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

 ஸ்டாலினை ஆதரித்தால் எதிர்ப்போம்

ஸ்டாலினை ஆதரித்தால் எதிர்ப்போம்

இன்று மு.க.ஸ்டாலின் ஊழலுக்கு எதிராக பேசி தன்னை புனிதர் போல காட்டிக் கொள்கிறார். அதையும் கமல் ஆதரித்தால் அவரையும் சேர்த்து எதிர்ப்போம், ஒரு நடுநிலையாளன் தவறு எங்கு இருந்தாலும் தவறு என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அதில் இவருக்கு ஆதரவு, அவருக்கு எதிர்ப்பு என்பதையெல்லாம் ஏற்க முடியாது.

 எதற்காக எச்.ராஜா எதிர்க்கிறார்

எதற்காக எச்.ராஜா எதிர்க்கிறார்

கமல்ஹாசன் ஊழலை எதிர்ப்பதால் எச்.ராஜா எதிர்க்கவில்லை, இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் எதிர்ப்பதாகச் சொல்கிறார். அதற்கு உதாரணமாக அவர் சொல்கிறார் அன்பே சிவம் படத்தில் விபூதியை அழித்தவர், சிலுவையை அழிக்கவில்லை என்று சொல்கிறார். அப்படியானால் இந்தியன் படத்தில் ஊழல் செய்தவர்களைக் கொன்றதாகக்கூறி ஜெயிலில் போடச் சொல்வாரா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+