பக்கோடாவை மோடி வித்து காமிக்கட்டும்... அடுத்து என்ன பரோட்டாவும், சால்னாவும்தான்... சீமான் கலகல
Recommended Video

சென்னை: பக்கோடாவை எப்படி விற்பது என்று காட்டுங்கள் நாங்கள் விற்கிறோம் என்றும் அடுத்தது பரோட்டாவும் சால்னாவும் விற்க சொல்வார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற டிவி சேனல் ஒன்றின்கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அது வேலைவாய்ப்பு இல்லை என்பீர்களா என கூறியுள்ளார்.

பக்கோடா விற்பது
இதுபோல் எம்பியான பிறகு முதல்முறையாக நேற்றைய தினம் லோக்சபாவில் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறுகையில் வேலை இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.

பிரதமர் முன்மாதிரி
வேலைவாய்ப்பு குறித்து கேட்டால் மோடியும், அமித்ஷாவும் பக்கோடா விற்க சொல்வதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், முதல்ல முன்மாதிரியா பிரதமரும், அமித்ஷாவும் பக்கோடா விற்றுக் காட்டினால் அதை பார்த்து நாமும் கற்றுக் கொண்டு விற்கலாம்.

நீங்கள் போக வேண்டியதுதானே
பக்கோடா விற்பதே நல்ல வேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்?, அமித்ஷா ஏன் ஒரு கட்சியின் அகில இந்திய தலைவராக இருக்க வேண்டும்? இருவரும் பக்கோடா விற்க சென்று விட வேண்டியதுதானே.

டீ விற்றார் மோடி
இதை பார்த்துவிட்டு நாட்டின் பிரதமரும், கட்சியின் தலைவருமே பக்கோடா விற்கிறார்களே, நாமும் விற்கலாம் என்று போய்விடலாம். அவர்கள் விற்று காட்ட வேண்டும். அவர் ஒரு காலத்தில் மோடி டீ விற்றார், இப்போது நம்மை பக்கோடா விற்க சொல்கிறார்.

கேடு கெட்ட நாடு
அடுத்து புரோட்டாவும் சால்னாவும் விற்க சொன்னாலும் விற்க சொல்லலாம். ஏதோ கேடு கெட்ட நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சீமான்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications