தமிழ் தேசிய - திராவிட பங்காளிச் சண்டைக்குள் வர நினைத்தால்... ராஜாவுக்கு சீமான் எச்சரிக்கை!
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையே நடக்கும் பங்காளிச் சண்டைக்குள் வர நினைத்தால் மண்டை உடைஞ்சிடும் என்று நாட் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை : தமிழ் தேசிய கட்சிகளுக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் இடையே பங்காளிச் சண்டை தான் நடக்கிறது. இதையே காரணமாக வைத்து உள்ளே வர நினைத்தால் மண்டை உடைந்துவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சீமான் பேசியதாவது : அதிகாரத் திமிறில் தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இன்னும் வீரியமாக நடக்கிறது. நான் சொல்கிறேன் ராஜா அதிமுக, திமுக முடிந்து விட்டது என்று கருதுகிறீர்கள்.
இதையே காரணமாக வைத்து உள்ளே வந்து விடலாம் என்று கனவிலும் நினைக்காதீர்கள். கருப்பண்ண சாமிஇ ஐயனார் சாமி கையில் இருப்பதை விட பெரிய அரிவாளை வைத்துக் கொண்டு நிற்போம் நாங்கள்.
|
பங்காளிச் சண்டை தான் நடக்கிறது
திராவிடக் கட்சிகளுக்கும், தமிழ் தேசியம் பேசும் எங்களுக்கும் நடப்பது பங்காளிச் சண்டை. 50 ஆண்டுகளாக நாட்டை கொடுத்தோம் நாட்டை நாசமாக்கிவிட்டார்களே என்ற சண்டை.

மண்ட பத்திரம்
இந்த சண்டைக்கு ஊடால வந்தா மண்ட ரெண்டாயிடும். தாமரை மலரும், தாமரை மலரும் என்று சொல்கிறார்கள். உடம்பில் படர்தாமரை தான் மலருமே ஒழிய இங்கு ஒரு தாமரையும் மலராது.

ரஜினியை கூட்டிட்டு வந்தா
நீங்க நோட்டாவுக்கு கீழே இருக்கிறீர்கள், பேட்டா ரஜினிகாந்தை கூட்டிக் கொண்டு வருகிறாய். தம்பி படத்தில் ஒரு டயலாக் வரும் நீ எந்த பக்கம் திரும்பினாலும் நான் நிற்பேன் என்று அதே போல ரஜினி எந்தப் பக்கம் திரும்பினாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன்.

பெரிய பிரச்னை இருக்கிறது
ரஜினி நினைத்துக் கொண்டார் சினிமாவில் சொல்வது போல நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரின்னு. தம்பி இங்க ஒவ்வொன்னையும் 100 தடவை சொல்லனும், அது தான் இங்கு இருக்கிற பெரிய பிரச்னை என்று பேசியுள்ளார் சீமான்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications