ராம்குமார் மர்ம மரணம்… நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சுவாதி சுவாதி கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி காவல்துறையின் விசாரணையின் போது சிறையில் மர்ம மரணம் அடைந்த ராம்குமார் உடலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ராயபேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறையில் தற்கொலை

சிறையில் தற்கொலை

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராம்குமார் சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காண்டுமிராண்டித்தனம்

காண்டுமிராண்டித்தனம்

வேலூர் சிறையில் தம்பி பேரறிவாளன் மீது கைதி ஒருவர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய சம்பவம் நடந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இராம்குமார் சிறைக்குள்ளே தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவித்திருப்பது சிறைக்குள் இருப்பவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சந்தேக மரணம்

சந்தேக மரணம்

நாட்டுக்குள்தான் சட்டம் ஒழுங்கு கெட்டு கொலைக் குற்றங்கள் நிகழ்கிறதென்றால் சிறைத்துறையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைக்குள்ளும் மரணங்கள் நிகழ்வது பெருத்த வேதனையான செய்தியாகும்.சுவாதி கொலை வழக்கு தொடர்பான மர்மங்களே இன்னும் விலகாத நிலையில் இராம்குமாரின் மரணம் இந்த வழக்கில் மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

கண்காணிப்பில் ஓட்டை

கண்காணிப்பில் ஓட்டை

நாடறிந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, உயர் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிற அளவுக்குத்தான் சிறையிலே பாதுகாப்பும், கண்காணிப்பும் உள்ளதா? கைது செய்ய செல்லும் போதே இராம்குமார் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என காவல்துறையினரே கூறியிருக்கும் நிலையில் அவரை சிறைத் துறையினர் எப்படி கண்காணிக்காமல் விட்டார்கள்?

மின்சாரப் பெட்டியை உடைக்க முடியுமா?

மின்சாரப் பெட்டியை உடைக்க முடியுமா?

இராம்குமார் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அவரது மன அழுத்தத்தைக் குறைக்காது இவ்வளவு நாட்களாக என்ன செய்தார்கள்? மின்சாரப் பெட்டியை உடைத்து மின்சாரக் கம்பியை வாயால் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றால், மின்சாரப் பெட்டியை உடைக்கிறவரை சிறைத்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

கேமரா ஏன் இல்லை?

கேமரா ஏன் இல்லை?

சத்தம் வெளியில் கேட்கவில்லையா? தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்றபோது இராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அவரது அறையில் தண்ணீர் வைக்கப்படவில்லையா? அவரது அறையில் தண்ணீர் இருக்கும்போது எதற்காக சமையலறைக்குச் செல்ல வேண்டும்? அப்படிச் செல்லும்போது அவரைக் கண்காணிக்காமல் சிறை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? அவர் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் இடத்திலிருக்கும் கண்காணிப்புக் கருவி மட்டும் வேலை செய்யாதது ஏன்?

மின்கம்பியை கடித்து சாக முடியுமா?

மின்கம்பியை கடித்து சாக முடியுமா?

மின்விளக்கு பொருத்துகிற மின்கம்பியில் உயிரைப் போக்குகிற அளவுக்கா உயர் மின் அழுத்தம் இருக்கும்? சாதாரண 1.5 மி.மீ. அளவுடைய மின்சாரக் கம்பியை பல்லால் கடித்து துண்டிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், உயிரை போக்கும் அளவிற்கு உயர் மின் அழுத்தம் பாயும் மின்சாரக் கம்பியை பற்களால் கடித்து துண்டிப்பது சாத்தியமா? மின்சாரம் தாக்கினால் தானாக மின் இணைப்பு துண்டிக்கும் தானியங்கி ட்ரிப்பர் அவ்வளவு பெரிய சிறையில் இல்லையா? அது இருந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பில்லையே?

மின்சார பெட்டியை உடைத்தது எப்படி?

மின்சார பெட்டியை உடைத்தது எப்படி?

பற்களால் மின்சாரக் கம்பியை கடித்து உயிரிழந்தார் என்றால், வாய்ப்பகுதியில் சிறு காயமோ, இரத்தக்கட்டோ ஏற்பட்டிருக்க வேண்டுமே, இராம்குமாரின் வாய்ப்பகுதியில் அப்படி எதுவும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே? புழல் சிறையிலுள்ள மின்இணைப்பு பெட்டிகள் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே அப்படியிருக்கும்போது எப்படி அதை உடைத்து தற்கொலை செய்து கொள்வது சாத்தியம்? சிறைக்கு வந்த புதிதில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்றால் வாய்ப்பிருக்கலாம்;

ராம்குமாரின் மரணம் கொலைதானோ?

ராம்குமாரின் மரணம் கொலைதானோ?

பிணை மனு விரைவில் போடப்பட இருந்த நிலையில் இராம்குமார் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என நீளும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் இராம்குமாரின் மரணம் கொலைதானோ என்ற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இராம்குமாரின் தந்தையும், வழக்கறிஞரும் இது தற்கொலை அல்ல! கொலை என்றே உறுதிபட தெரிவிக்கிறார்கள்.

வேண்டும் நீதி விசாரணை

வேண்டும் நீதி விசாரணை

எனவே, இவ்விவகாரத்தில் இராம்குமாரின் மரணத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உரிய நீதி விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+