ஜெயலலிதாம்மா நமக்கு விட்டுச் சென்ற ஒரே சொத்து 5 லட்சம் கோடி கடன்தான்... சீமான் அதிரடி
திருவாடானை: முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த மாநிலத்திற்கு விட்டுச் சென்ற ஒரே சொத்து ரூ. 5 லட்சம் கோடி கடன்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஜெயலலிதா தமிழகத்திற்கு வெறும் கடனைத்தான் விட்டுச் சென்றுள்ளார் என்று அவர் சாடினார். சீமான் பேச்சிலிருந்து:

தமிழனை ஆட்சி செய்ய வையுங்கள்
ஒட்டு மொத்த தமிழர்களும் சேர்ந்து ஒரு தமிழனை ஆட்சி செய்ய வைக்கமுடியும். யார் வேண்டுமானாலும் இந்த நிலத்தில் வாழலாம். ஆனால் இந்த நிலத்தை தமிழன் தான் ஆளமுடியும்.

அரசியல் படியுங்கள்
தமிழகத்தில் தனிமனித அபிமானிகளை ஒழிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் அரசியல் படிக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகாளாக கத்தினேன். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு தான் தமிழக மக்கள் ஓட்டுப்போட்டீர்கள்.

விலகி நிற்காதீர்கள்
அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் வேண்டாம் என நீங்கள் விலகி நின்றால் நாம் யாரை வெறுக்கிறோமோ அவர் தலைமையிலான ஆட்சியின்கீழ் தான் வாழவேண்டி வரும்.

வளமெல்லாம் அழிகிறது
நம் வளங்களை அளித்து வருவதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. அரசு போக்குவரத்து துறையில் ரூ.44,000 கோடி கடன். மின்துறையில் பல ஆயிரம் கோடி நஷ்டம்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற சொத்து!
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார். மிகப்பெரிய கனவுகளோடு நாம் தமிழர் கட்சி தமிழக மக்களுக்காக போராடி வருகிறது.

நாம் தமிழரின் கனவு
நாம் தமிழர் கட்சியின் தத்துவங்களை வைத்து ஒருநாள் ஆட்சியை நடத்துவார்கள். தமிழனும் தமிழும் 50,000 ஆண்டுகளுக்கு மூத்தவர்கள் என உலக அறிஞர்களும், நம் முன்னோர்களும் சொல்லி சென்றுள்ளனர். தமிழ்நாட்டை சாதியால் ஆளமுடியாது என்றார் சீமான்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications