அப்பட்டமான உரிமைப்பறி.. நீலகிரி தோட்டக்கலைத்துறை தொழிலாளர்களுக்காக களம் இறங்கிய சீமான்
ஊட்டி: நீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுக்கும், தொழிலாளர் உரிமைக்கும் மதிப்பளித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "நீலகிரி மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணிசெய்து வரும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி முன்னெடுத்து வரும் போராட்டமானது மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

மொத்தமுள்ள 800 ஊழியர்களில் 300 பேர் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும், மீதி 500 பேர் தற்காலிகப் பணியாளர்களாகவே தொடர்கின்றனர் என்பது வேதனைக்குரியதாகும். பல ஆண்டுகளுக்கு மேலாகப் பணிசெய்து வருகிறபோதிலும் அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய மறுத்து வரும் அரசின் நிர்வாகச்செயல்பாடு மிகத் தவறானதாகும்.
இத்தோடு, நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கப்பட்டவர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்படாதிருக்கிறது என்பது அப்பட்டமான உரிமைப்பறிப்பாகும். இவ்வாறு, தொழிலாளர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் எதிரான நிர்வாக இயக்கத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்; பண்ணைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும்; தோட்டக் கலைத்துறையில் பணியாற்றும் பண்ணைப் பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகைப் பிடித்தம் செய்திட வேண்டும்;

பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டுப் பணிக்காலம் முடித்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பூங்கா மற்றும் பண்ணைப் பணியாளர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவியுயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை முன்வைத்து அப்பணியாளர்கள் அறவழியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, அதனை ஆய்ந்தறிந்து செய்து தர வேண்டியது அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும்.
ஆகவே, நீலகிரி தோட்டக்கலைத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுக்கும், தொழிலாளர் உரிமைக்கும் மதிப்பளித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications