மாணவர்களுக்கு சோறு, தண்ணீ கொடுத்தது தப்பா.. திட்டமிட்டு கொளுத்திய போலீசார்.. கொதித்த சீமான்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சோறு, தண்ணீர் கொடுத்து உதவியவர்களின் மீன் சந்தையை போலீசார் திட்டமிட்டு கொளுத்தியுள்ளனர் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
சென்னை: சென்னை கலவரத்தின் போது நடுகுப்பத்தில் போலீசாரால் எரிக்கப்பட்ட மீன் சந்தையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை பார்வையிட்டார். அப்போது, தமிழக அரசும், காவல்துறையும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம்சாட்டினார்.
சென்னை நடுகுப்பத்தில் எரிந்த மீன் சந்தை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழர்களின் எழுச்சியான போராட்டத்தை திட்டமிட்டு வன்முறையாக தமிழக அரசும், காவல்துறையும் மாற்றியுள்ளது. மாணவர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? சட்டம் குறித்து பேச நீதிபதிகள் ஹரிபரந்தாமன் மற்றும் சங்கர சுப்பு போன்றவர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து மாணவர்களிடம் அரசு பேசியிருக்கலாம். அப்படி பேசி இருந்தால் அரசுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருக்காது.
போராட்டக்காரர்களுக்கு சோறும், தண்ணீரும் கொடுத்தது தப்பா. அதற்காக அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்துவதா? ஆற்று மணல் கொள்ளையடித்தவர்களை, மரம் வெட்டி கடத்தியவர்களை, ஊழல் செய்தவர்களை என்ன செய்தீர்கள்?
பாஸ்பரஸ் பொடியை தூவி மீன் சந்தையை எரித்துள்ளது போலீஸ். இதனை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. பச்சை பிள்ளை என்று கூட பாராமல் குழந்தைகளையும், சிறுவர்களையும் போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு இனி உதவக் கூடாது என்பதற்காகத்தான் போலீசார் இப்படி செய்துள்ளனர்.

போலீசாரால் மண்டை உடைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எல்லாம் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியுமா? வாழ்வாதாரத்தை சீர் செய்ய வேண்டிய அரசே அதனை நசுக்குகிறது.
உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எரிக்கப்பட்ட மீன் சந்தைக்கு மேற்கூரை அமைத்து, சந்தை மீண்டும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். காலம் தாழ்த்தாமல் இதனை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications