கட்டிக்கட்டியாக தங்கம் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு
கோடிக்கணக்கில் ரொக்கப்பணத்தை பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டி புழல் சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: 136 கோடி ரொக்கம், 177 கிலோ தங்கத்தைப் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 136 கோடி ரூபாய் ரொக்கம், 177 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் மிக புள்ளிகளுடனும், அரசின் உயர் மட்ட அதிகாரிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சேகர் ரெட்டி கோடிக்கணக்கான பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை பெற்றார்.

கணக்கில்லாமல் பணத்தை சேர்த்த சேகர் ரெட்டிக்கு திடீரென வருமானவரித் துறை வைத்தது ஆப்பு. சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி ஆகியோரை சிபிஐ போலீசார் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை குற்றச்சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திடீரென கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலுவை ஜனவரி 3ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications