இலக்கை அடைவது எப்படி?.. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2-8-16 அன்று தன்னம்பிக்கை பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமையாசிரியர் பீட்டர்ராஜா அவர்கள் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தன்னம்பிக்கை பயிற்சியாளர் வினைதீர்த்தான் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

மாணவர்களுக்கு நேர மேலாண்மை, நினைவாற்றல் மேம்படுத்துதல், ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இலக்கு அமைத்தல், இலக்கை அடைதல் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.

மாணவர்களுக்கு குறிப்பாக அரசு பொதுத் தேர்வில அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற தேவையான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பட்டதாரி ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் செய்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications