இன்று செமஸ்டர் தேர்வு: ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் திக்..திக்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில இன்று தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்காதால் பதற்றத்தில் உள்ளனர்.
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் தேர்வு இன்று ஆரம்பமாகிறது. ஆனால் ஹால் டிக்கெட் பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் என பல்கலை கழகம் அறிவித்திருந்தது.

ஆனால் பலருக்கு ஆன் லைன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர். பலர் பல்வேறு இடங்களில் உள்ள நெட் சென்டர்களுக்கும் அலைந்து திரிந்தனர். குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் இணைப்பு கிடைத்து லைன் மீண்டும் துண்டானது.
இதுகுறித்து பல்கலை கழகத்தில் புகார் செய்தும் சரியான பதில் இல்லை. இதன் காரணமாக பலர் கவலை அடைந்தனர். ஒரு சில இடங்களில் மட்டும் இணைப்பு கிடைத்தது. ஆயினும் பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், நான் ஜான்ஸ் கல்லூரியில் பிசிஏ படித்து வருகிறேன். எனக்கு கடந்த மூன்று நாட்களாவே ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதே நிலை தான் என் நண்பருக்கும். இதனால் தேர்வுக்கு படிக்க முடியாமல் ஆன் லைன் சென்டருக்கு நடந்து வருகிறோம்.
இதனிடையே இது குறித்த புகார் குவிந்ததால் இரவு அதிரடியாக கூடுதலாக மூன்று இணைப்புகள் கொடுப்பட்டது. இருப்பினும் ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அவர்கள் பணம் கட்டிய படிவத்தை தேர்வு கூடத்தில் காட்டினால் போதும் என்றும் பல்கலை கழக வட்டாரம் தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications