போலி ஆவணங்களை வெளியிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி... அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம்
போலி ஆவணங்களை வெளியிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஆர்.கே. நகர் மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சருகளும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது அம்பலமாகியுள்ளது.
சோதனை தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இதையடுத்து அறிக்கையுடன் டெல்லி சென்ற விக்ரம் பத்ரா அதனை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனை அதிமுக அம்மா கட்சி தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆர்.கே. நகர் தொகுதி வாக்களாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள ஆவணங்கள் பொய்யானது என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி போலி ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலியான ஆவணங்களை வெளியிட்டு தங்களை களங்கப்படுத்த முயற்சிப்பதாகவும் செங்கோட்டையைன் கூறியுள்ளார்.
இந்த தவறான தகவல்களை ஆர்.கே.நகர் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications