அன்பில் மகேஷ் ரூட் கிளியர்.. கேஎன் நேருவுக்கும் சர்ப்ரைஸ்.. இரட்டைகுழல் துப்பாக்கி ரெடி.. திமுக மாஸ்
கே.என் நேருவுக்கு முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது
சென்னை: எம்பி டிஆர் பாலு ஒருவரே எத்தனை பதவிகளை வகிப்பது.. அதனால்தான் திமுகவின் மூத்த தலைவரான கேஎன் நேருவுக்கு முதன்மை செயலாளர் பதவி வழங்கி சர்ப்ரைஸ் தந்துள்ளது திமுக தலைமை.. இதன்மூலம் திருச்சி மா.செ. பதவிக்கான அன்பில் மகேஷ் ரூட்டும் கிளியர் ஆகி உள்ளது!
கருணாநிதி இறந்தபோது சில முக்கிய பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டது.. அதன்படி துரைமுருகன் பதவி வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவியிலும் மாற்றம் என்ற பேச்சு வந்தது.
முதன்மை செயலாளர் பதவி என்பது பொருளாளருக்கு மேலான பதவி. அதனால் நிச்சயம் துரைமுருகன் அளவுக்கு ஈடாகவோ அல்லது மேலும் அனுபவம் வாய்ந்தவராகவோ இருக்கும் ஒருவருக்குத்தான் இந்த பதவியை அளிக்க முடியும் என்றும் கழக நிர்வாகிகள் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

டிஆர் பாலு
அதற்காக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரது பெயர்களும் முதன்மை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வந்தது.. இறுதியில் டி.ஆர்.பாலுவை முதன்மை நிலைய செயலாளராக நியமித்தனர்.. அரசியல் அனுபவம் நிறைந்த டி.ஆர்.பாலு இந்த பதவியை சிறப்பாகவே செய்து வந்தார். இந்நிலையில், டி.ஆர்.பாலு எம்பியானார்.. நாடாளுமன்ற குழுத்தலைவராகவும் உயர்ந்தார்.

முதன்மை செயலாளர்
ஒருவரிடமே 2 பதவிகள் இருப்பதால். டிஆர்பாலு இருக்கும் இடத்தில் கேஎன்நேரு அமர்த்தப்படலாம் என்ற பேச்சு சில தினங்களுக்கு முன்பு எழுந்தது.. முக்கிய பொறுப்பு தனக்கு கிடைக்கலாம் என்று நேருவே தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வந்தாராம்.. ஆனால், தலைமை நிலைய முதன்மை செயலாளர் பதவியா, துணைப் பொதுச் செயலாளர் பதவியா என்பதில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முதன்மை செயலாளர் பதவி டிஆர் பாலுவுக்கு தரப்பட்டுள்ளது.

நிர்வாகிகள்
இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. அன்பில் மகேஷூக்கு திருச்சி மாவட்ட செயலாளர் பதவி ஒதுக்க போவதாகவும் சலசலக்கப்பட்டு வருகிறது.. ஏனெனில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே, அதிமுகவுடன் நட்பு பாராட்டி வருவதால்தான் சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கு தகவல்கள் போயுள்ளன. அதனால் யாரெல்லாம் அதிமுகவினரோடு தொடர்பில் இருக்கிறார்களோ, அந்த நிர்வாகிகளை களையெடுக்க வேண்டும் என்று தலைமையும் முடிவு செய்துள்ளதாம்.

அன்பில் மகேஷ்
இந்த அசைன்மென்ட்தான் மகேஷுக்கு தரவும் முடிவு செய்து.. அதனால்தான் மாவட்ட செயலாளராக உயர்த்தலாமா என்ற பேச்சும் எழுந்து வருகிறது. கட்சியின் மூத்த தலைவர் கேஎன் நேரு இருக்கும்போது மகேஷுக்கு பொறுப்பு என்பது சரியாக இருக்காது.. அதனால் சீனியரான கே.என்.நேருவுக்கு மிக மிக முக்கிய பதவியான முதன்மை செயலாளர் பதவி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்ழகன் தன் அறிக்கை வாயிலாக விடுத்துள்ளார்.

மகிழ்ச்சி - நம்பிக்கை
தமிழக அமைச்சரவையில் 3 முறை அமைச்சராக பதவி வகித்தவர் கேஎன் நேரு.. போக்குவரத்து துறை, உணவுத்துறை, மின்சார துறை என அமைச்சர் பதவியை சிறப்பாக செய்தவர்.. கடந்த 2016-ல் சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.. திமுக உயர் மட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.. இத்தனை பொறுப்புகள், பதவிகள், அனுபவங்களை பெற்ற கேஎன் நேரு, முதன்மை செயலாளர் பொறுப்பையும் மெச்சத்தகுந்த வகையிலேயே செய்வார் என்ற நம்பிக்கை கழக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications