அப்பல்லோவுக்கு வந்த செந்தில் பாலாஜி, ஏ.கே.போஸ்.. ஜெ. சந்திப்பாரா.. ஆசி கிடைக்குமா?
முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி வாங்குவதற்காக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி , ஏ.கே. போஸ் அகியோர் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜியும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் ஆகியோர் இன்று முதல்வரை சந்திப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

அப்பல்லோவிற்கு வருகை
தேர்தலில் வெற்றி பெற்ற உடன் கட்சியின் பொதுச்செயலாளரிடம் ஆசி பெறுவது வழக்கம். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை சந்திக்க இன்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.

செந்தில் பாலாஜி
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக அமைச்சர்கள் 11 பேர், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர்.

ஏகே போஸ்
திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து, திமுக வேட்பாளரான டாக்டர் சரவணனை தோல்வியுறச் செய்து அதிமுக வேட்பாளரான ஏ.கே.போஸ் வெற்றி பெற பாடுபட்டிருக்கிறார்கள். 42670 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் ஏ.கே. போஸ்.

மெகா வெற்றி
மூன்று தொகுதிகளிலுமே அதிமுகவுக்கு கிடைத்திருப்பது மெகா வெற்றிதான். வெற்றியை வரவேற்று உடனடியாக அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. எப்படியாவது அப்பல்லோவுக்கு அழைத்தாவது அம்மா நம்மை சந்திப்பார் என்று வெற்றி பெற்ற மூவரும் காத்திருக்க, செல்போனில் அழைத்து நேற்று மாலை வாழ்த்து சொன்னாராம் சசிகலா. இன்று அப்பல்லோவிற்கு வந்துள்ள இருவரும் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி பெறுவார்களா? அல்லது சின்னம்மா சசிகலாவிடம் மட்டுமே ஆசி பெற்று செல்வார்களா?
-
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications