தம்பிதுரைக்காக பெண்கள் காலில் விழுந்து வாக்கு கேட்கும் செந்தில்நாதன்
கரூர்: கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக வித்தியாசமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அக்கட்சியின் முன்னாள் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்நாதன்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் திமுக கோடீஸ்வர வேட்பாளர் கே.சி. பழனிசாமியுடன் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர் செந்தில்நாதன்.
இதனால் இவருக்கு மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் என்ற உயர்ந்த பதவியை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வழங்கினார். பின்பு அந்த பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் வாக்கு சேகரித்து வருகின்றார். ஆனால் அவருக்கு பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. இதன் காரணமாகவே அவர் பல இடங்களில் பிரச்சாரம் செய்யாமலே திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து அந்தந்த பகுதியில் செல்வாக்கு மிகுந்த நபர்களை தனித்தனியாக களம் இறக்கினார் தம்பிதுரை. இதன் காரணமாக ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதியில் நன்கு அறிமுகம் ஆன செந்தில்நாதன் தம்பித்துரைக்காக காடு மேடுகளில் எல்லாம் வலம் வந்து பொது மக்களிடம் வாக்கு கேட்கின்றார்.
குறிப்பாக பெண்கள் காலில் விழுந்து வாக்கு கேப்படது பெண்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அரவக்குறிச்சி பகுதியில் பின் தங்கி இருந்த அதிமுக தற்போது புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த அதிமுகவின் திடீர் வேகத்திற்கு எப்படி பிரேக் போடுவது என திமுக தரப்பு ரூம் போட்டு யோசனை நடத்தி வருகின்றது. காரணம், அங்கு திமுக தரப்பில் வலுவான நபர்கள் யாரும் இல்லை என்பது தான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications