விழுப்புரம்: பெஞ்சில் உட்காருவதில் தகராறு: 7ம் வகுப்பு மாணவன் கொலை
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் 7 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் அருகேயுள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அம்மைககார அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று பள்ளி வந்த பாலமுருகனுக்கும் சக மாணவர் ஒருவருக்கும் உணவு இடைவேளையின் போது, பெஞ்சில் அமர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மாணவர் ஒருவர் பாலமுருகனை கீழே தள்ளியுள்ளார். மர பெஞ்சின் மீது விழுந்த பாலமுருகன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். எனினும், செல்லும் வழியிலேயே பாலமுருகன் இறந்துவிட்டார்.
இதுகுறித்து சின்ன சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை தள்ளிவிட்ட சக மாணவரை பிடித்து சிறுவர் நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர். அவர் பின்னர் கடலூரில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications