For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.. கெத்தை காண்பிக்க கட்சிகள் கூட்டம் கூட்டுவதால் டிராபிக் ஜாம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் பலத்தை காண்பிக்க கூட்டத்தை கூட்டுவதால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் பலத்தை காண்பிக்க கூட்டத்தை கூட்டுவதால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே. இடைத்தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பலமுனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் தங்களிடம் ஆள் பலம் இருப்பதை நிரூபிக்க ஒவ்வொரு கட்சியினரும் கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.

Severe traffic jam in RK Nagar, motorist disappoints

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்கின்றன. வெறும் 2.85 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் முழுக்க மக்கள் தலைகள்தான் தென்படுகின்றன. வெயில் வேறு மண்டையை பிளப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.

வடசென்னையின் முக்கிய நுழைவுகளான எண்ணுார் சாலையும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையும் பிரசாரம் ஆரம்பித்த நாள் முதலே, முற்றிலும் முடங்கி போயுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் பல மணி நேரம் நகராமல் இருக்கும் வாகனங்களால் ஆத்திரமடையும் வாகன ஓட்டிகள் ஹாரன்களை அடித்து தங்கள் எதிர்ப்பை காண்பிக்கின்றனர்.

English summary
RK Nagar by poll held on April 12. Many contestants are contesting in this election. To show their strength, political parties are gathering crowd, so severe traffic jam in that place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X