டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக... சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
29வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில், 29 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாஸ்திரி பவன் முற்றுகை
100க்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் சாஸ்திரி பவன் முன் ஒன்றுகூடி விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். சாஸ்திரி பவனின் வாசலில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது
இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மக்கள் ஆதரவு
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களிடமும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் பேசும் போது, விவசாயிகள் போராட்டம் தொடரும் வரைக்கும் மாணவர்களின் ஆதரவு விவசாயிகளுக்கு தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்தனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications