சத்தியமூர்த்தி பவனில் நிழல் தலைவரான சம்பந்தி... திருநாவுக்கு எதிராக கிளம்பும் கோஷ்டிகள்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சம்பந்தியின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிறதாக புலம்புகின்றனர் கதர்சட்டைக்காரர்கள்
சென்னை: சத்தியமூர்த்தி பவன்னாலே கோஷ்டி சண்டை இருக்கத்தான் செய்யும். ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் எந்த பொருப்பிலுமே இல்லாத ஒருவர் அதிகாரம் செலுத்துவது கதர்சட்டைக்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரின் சம்மந்தி பண்ணும் அலப்பறை தாங்க முடியவில்லை என்கிற புலம்பல்கள் இப்போது சத்தியமூர்த்திபவனில் எதிரொலிக்கிறது. சம்பந்தியைப் பற்றியும், திருநாவுக்கு எதிரான புகார் பட்டியலை கதர் கோஷ்டிகள் டெல்லியில் வாசிக்கத் துவங்கியிருக்கின்றனராம்.

திருநாவுக்கரசரின் சம்மந்தி விஜயக்குமார். தமிழக காங்கிரசில் எந்த பொறுப்புகளிலும் அவர் இல்லை. மாநில தலைவராக திருநா நியமிக்கப்பட்ட மறுநாளிலிருந்து சத்தியமூர்த்திபவனுக்கு வரத்தொடங்கிவிட்டார் சம்மந்தி. பவனில் சட்டமாக உட்கார்ந்துகொண்டு கட்சின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என பலருக்கும் போன் போட்டு அதிரடியாகப் பேசுகிறாராம்.
இவர் யார் நமக்கு உத்தரவு போடுவது? தலைவரின் சம்மந்தின்னா அதை வீட்டோடு இருக்கணும். நிர்வாகிகளுக்கு உத்தரவுப் போடும் அதிகாரம் இவருக்கு யார் தந்தது ? என கோபமடைந்து வருகிறார்கள் சீனியர்கள்.
இடைத்தேர்தல் முடிந்ததும் புதிய நிர்வாகிகளை நியமிக்க ராகுல் அனுமதி தந்துவிடுவார் என்று சொல்லிவருகிறார் திருநா. இதனை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, திருநாவின் ஆதரவாளர்களை தொடர்புகொள்ளும் சம்மந்தி, போஸ்டிங் வேணும்னா.....? என்று தனது எதிர்ப்பார்ப்புகளை சொல்கிறார்.
சத்தியமூர்த்திபவனில் அமர்ந்து கொண்டே இதனை செய்து வருவதால் சீனியர்கள் எரிச்சலடைந்துள்ளனர். திருநாவின் நலன் விரும்பிகள், இதணை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதுடன், உங்க பேரை ரிப்பாராக்கி கொண்டிருக்கிறார் என்றும் சொல்லியுள்ளார்கள். இருப்பினும் சம்மந்தியை எப்படி கண்டிப்பது என தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டிருக்கிறார் திருநாவுக்கரசர்.
இதற்கிடையே, இந்த விவகாரங்களை விவரித்து, காங்கிரசின் நிழல் தலைவராக செயல்படுகிறார் திருநாவுக்கரசரின் சம்மந்தி என டெல்லிக்கு புகார் பட்டியலை வாசித்து வருகின்றனர் கோஷ்டி தலைவர்கள்.












Click it and Unblock the Notifications