பாகிஸ்தானுக்கு வந்துடுங்க ஷாருக்கான்: ட்விட்டரில் அழைப்பு விடுத்த தீவிரவாதி ஹபீஸ் சயீத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு வந்துவிடுமாறு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமாத்துத்தவாவின் தலைவர் ஹபீஸ் சயீத் அழைப்பு விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நாட்டில் அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையின்மை பற்றி கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட் என்றும், அவர் அங்கு சென்று வசிக்கட்டும் என்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார்.

Shah Rukh Khan gets invitation to stay in Pakistan from India's most wanted terrorist Hafiz Saeed

இந்நிலையில் 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக தேடப்படும் தீவிரவாதி ஹபீஸ் சயீத் ட்விட்டரில் ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

விளையாட்டு, கல்வி, கலை மற்றும் கலாச்சாரத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய முஸ்லீம்கள் கூட இந்தியாவில் தங்களின் அடையாளத்திற்காக தொடர்ந்து போராட வேண்டி உள்ளது.

இந்தியாவில் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு முஸ்லீமும் ஏன் அது ஷாருக்கானாக இருந்தாலும் பாகிஸ்தானில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+