சென்னை மக்களுக்கு உதவும் பெண் தன்னார்வலர்களை சங்கடப்படுத்தும் சில ஆண்கள்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ முன்வந்த பெண் தன்னார்வலர்கள் சில விஷமிகளால் வேதனை அடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஏராளமான தன்னார்வலர்கள் உதவினார்கள், உதவி செய்து வருகிறார்கள். பல பெண்களும் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அப்படி தன்னார்வலர்களாக செயல்படும் பெண்கள் தங்களின் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உதவி தேவைப்படுவோர் தங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

அப்படி செல்போன் எண்களை அளித்த பெண்களில் ஒருவரான ப்ரியாவுக்கு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ப்ரியாவை தொடர்பு கொண்டுள்ளார். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று ப்ரியா கேட்டதற்கு, நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என இரட்டை அர்த்தத்தில் அவர் பேசியுள்ளார்.
ப்ரியா போன்று பல பெண் தன்னார்வலர்களும் செல்போன் எண்ணை வெளியிட்டு சங்கடத்தில் சிக்கியுள்ளனர். பூர்ணிமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சென்னை மக்களுக்காக நிவாரணப் பொருட்களை சேகரித்துள்ளார். அப்போது அழகு என்பவர் எதுவும் அளிக்காமல் பூர்ணிமாவுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
திவ்யா பாலச்சந்தர் என்ற சிவில் என்ஜினியர் கூறுகையில்,
முதலில் நாங்கள் எல்லாம் சகோதரர்கள் போன்று என்று கூறி ஆரம்பிக்கிறார்கள். பின்னர் சம்பந்தமே இல்லாத மெசேஜ்கள் அனுப்புகிறார்கள். தனக்கு பயமாக உள்ளதாக ஒருவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியதுடன், போன் செய்தார். என்னவென்று கேட்டதற்கு கன்றுக்குட்டிக்கு உணவு அளிப்பதாக தெரிவித்தார். இரவு முழுவதும் எனக்கு மெசேஜ் அனுப்பினார்.
அறை முழுவதும் தண்ணீராக உள்ளதாக மறுநாள் அவர் தெரிவித்தார். எங்கு என்று கேட்டதற்கு தெரியாது என்றார். தன்னை சகோதரர் போன்று நினைக்குமாறு கூறி புகைப்படம் அனுப்ப முயன்றார் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications