'தேசிய திலகம்' குஷ்பு... இது 'நடிகர் திலகம்'சிவாஜி ரசிகர்கள் கொடுத்த பட்டமுங்க...
சென்னை: நடிகை குஷ்புவிற்கு 'தேசிய திலகம்' என்று பட்டம் கொடுத்து அசத்தியுள்ளனர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள். அதுவும் நிகழ்ச்சிக்கே வராத குஷ்புவிற்கு வம்படியாக பட்டத்தைக் கொடுத்துள்ளனர் ரசிக கண்மணிகள்.
90களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. பிரபு உடன் ஜோடி சேர்ந்து... ரஜினி, கமல் என்று உச்ச நடிகர்களுடன் நடித்த குஷ்புவிற்கு கோவில் கட்டிய தமிழக ரசிகர்கள் இருக்கின்றனர்.

சினிமாவில் கதாநாயகியான நடித்த பின்னர் அக்கா, அண்ணியாக நடித்த போதும் சரி குஷ்புதான் சென்டர் ஆஃப் த அட்ராக்சன். திரை நட்சத்திரமாக ஜொலித்த குஷ்பு தனது அடுத்த ரவுண்டை சின்னத்திரையில் தொடங்கினார். ஜாக்பாட் கேம் ஷோவில் குஷ்புவின் ஜாக்கெட்தான் அதிக பிரபலம்.
அரசியலில் குதித்த குஷ்பு
அதிமுகவின் ஆஸ்தான சேனலில் இருந்த போதே காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் குஷ்பு என்ற பேச்சு அடிபட்டது. இல்லை இல்லை அதிமுகவில் இணைவார் குஷ்பு என்று பேசப்பட்டது. ரைட் இன்டிகேட்டர், லெப்ட்ல சிக்னல் காட்டிட்டு நேரா போயிட்டாங்களே என்பது போல திமுகவில் இணைந்தார் குஷ்பு.
காங்கிரஸ் கட்சியில்
சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தார். ஆனாலும் எந்தவித பதவியோ, தேர்தலில் நிற்க இடமோ கிடைக்கவில்லை. சில கசப்பான சம்பவங்களினால், திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது அவர் என் தாய் வீட்டுக்கு வந்தது போன உணர்கிறேன் என்று கூறினார்.
செய்தி தொடர்பாளர்
காங்கிரசில் இணைந்த சில மாதங்களிலேயே குஷ்புவிற்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரசின் பிரசார பீரங்கியாக கட்சி பயன்படுத்தி வருகிறது. அவரும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார்.
சிவாஜி பிறந்தநாள் விழா
சென்னை சூளையில் சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரசார் சிவாஜி பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குஷ்பு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அவரை ‘தேசிய திலகம்' என்ற பட்டத்துடன் சிவாஜி ரசிகர்கள் விளம்பரப்படுத்தி இருந்தனர்.
குஷ்பு வரலையே
குஷ்பு மகள் உடல்நிலை சரியில்லாததால் கடைசி நேரத்தில் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியில் சிவாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பெண்களுக்கு இலவச சேலைகளை மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் வழங்கினார்.
காங்கிரசை வளர்க்கிறார்
நடிகர் திலகம் சிவாஜி காங்கிரசை வளர்த்தார். அவரைப் போலவே இன்று குஷ்புவும் தேசிய அளவில் காங்கிரசை வளர்க்க பணியாற்றுகிறார், எனவே தேசிய திலகம் என்ற பட்டத்தை நாங்கள் வழங்கி உள்ளோம் என்று கூறினார் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் சூளை ராஜேந்திரன். போஸ்டர் அடிச்சு... பட்டம் எல்லாம் கொடுத்தும் குஷ்பு வரலையேப்பா என்று கடைசியில் சிவாஜி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது கண் கூடாக தெரிந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications