எடுத்துக்கோ.. என் வயசுல 2ஐ எடுத்துக்கோ.. உருக வைத்த நடிகர் திலகம்.. நெகிழ்ந்து போன கருணாநிதி!
சென்னை: எப்படி நடிப்பையும், நடிகர் திலகத்தையும் பிரிக்க முடியாதோ.. அதே போலத்தான் கருணாநிதியையும், சிவாஜியையும் பிரித்துப் பார்க்க முடியாது.
இருவரது உறவும், நட்பும், அதை விட அன்னியோன்யமான அந்த வாஞ்சையும் கடந்த 5 தசாப்தங்களில் யாரிடமும் காண முடியாதது. சிவாஜியும் சரி, கருணாநிதியும் சரி தங்களது திறமைகளை மோத விட்டு மேலே வந்தவர்கள். அந்த கொடுப்பினை இப்போது உள்ள எந்த நடிகருக்கும் கிடையாது.

சிவாஜிக்காக கருணாநிதி வசனம் எழுதினாரா அல்லது கருணாநிதியின் வசனத்தை சிவாஜி சிறப்பாக பேசினாரா என்று ஆயிரம் பட்டிமன்றம் வைத்தாலும் தீர்ப்பு சொல்ல முடியாது. இந்த இருவரின் படங்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் பல புதுமைகளையும், புரட்சிகளையும் படைத்த மகா காவியங்கள்.
நண்பனே என் வயதை எடுத்துக்கோ ....சிவாஜி உருக்கம்#கருணாநிதி #திமுகதலைவர்50 #KarunanidhiHealth #Karunanithi #DMKSupremo50 #DMK #kalaingarKarunanidhi #Karunanidhi #Kalaingar #Kalainger #sunnews @sunnewstamil pic.twitter.com/BF1wHnSYYC
— Sun News (@sunnewstamil) July 29, 2018
1998ம் ஆண்டு நடந்த கலைஞர் பவள விழா நிகழ்ச்சியின்போது இதை நினைவு கூர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசியிருந்தார். அந்தப் பேச்சின் தொகுப்பு இது.. அந்தப் பேச்சையும், கருணாநிதியின் முக வசீகரத்தையும் பாருங்கள்....!












Click it and Unblock the Notifications