ஜெயில் போனா கெத்து! போலீஸ் கேஸ் வாங்குனா கெத்து! வடமாநில இளைஞர் தாக்குதலுக்கு பின் உள்ள ஷாக் உளவியல்
திருத்தணி: திருத்தணியை நோக்கிச் சென்ற ரயில் பெட்டிக்குள், சிலர் அரிவாளுடன் மிரட்டி வடஇந்திய தொழிலாளியைத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்ட சிறுவன், பாதிக்கப்பட்ட தொழிலாளி அருகே 'வெற்றிக் குறி' காட்டி நின்றது, இன்ஸ்டாகிராம் ரீலாகப் பகிரப்பட்டு வைரலானது. ஒடிசாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வேலை பார்த்து வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் என்ற புலம்பெயர் தொழிலாளியைத்தான் நான்கு சிறுவர்கள் அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிராஜ், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய நான்கு சிறுவர்களில், மூவர் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். நான்காவது சிறுவன் தனது படிப்பைக் காரணம் காட்டி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டான்.
கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கொடூரமாக இந்த தாக்குதல்களை அந்த சிறுவர்கள் மேற்கொண்டு உள்ளனர். வடமாநில இளைஞர் கெஞ்சி கேட்டும் அவரை கொடூரமாக தாக்கும் சிறுவர்கள், இந்த காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின் பல சமூக காரணங்களும், உளவியல் காரணங்களும் உள்ளன.
சமூக காரணங்களும், உளவியல் காரணங்களும்
1. குற்றச்செயல்களில் ஈடுபடுவது.. தவறு என்பது தாண்டி சிலரிடம் அது ஹீரோயிசம் போல மாறிவிட்டது. முக்கியமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் இது ஹீரோயிசமாக உள்ளது.
2. வெட்டுனா ஜெயிலு.. போன புழலு.. இறங்குனா பெயிலு என்று ரைமிங்காக பேசும் இளைஞர்கள் பலர் இப்போது டிரெண்டாகி வருகிறார்கள். இப்படி பேசுவது.. குற்றச்செயல்களில் ஈடுபடுவது இப்போது சில இளைஞர்கள் மத்தியில் "கூல்" ஆகிவிட்டது.
3. முக்கியமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரத்திற்கு இடையில். வேகமாக டிரென்டாக எதையாவது செய்ய வேண்டும். அதற்காக சிலர் இப்படி கத்தியை காட்டி ரீல்ஸ் போடுவது ரவுடி போல காட்டிக்கொள்வது அதிகரித்துள்ளது.
4. இப்படி கிரைம் செய்வதை கூட பாடலாக பாடி சிலர்.. அதை ஹீரோயிசம் என்று நம்புவதும் வழக்கம் ஆகி உள்ளது. சாமான் பறக்கும், பொருளை போடு, மட்டை பண்ணு, கேசு வாங்கு என்று குற்றங்களை செய்வதை கூலாக வர்ணிக்கும் பாடல்கள் அதிகம் வருவதும்.. சமயங்களில் அது மெயின் ஸ்ட்ரீம் படங்களில் கூட வருவதும் கூட.. இந்த கலாச்சாரம் அதிகரிக்க காரணம் ஆகிவிட்டது.
5. இப்படி எல்லாம் செய்தால்.. நாமும் ஹீரோ போல.. நானும் பிரபலம் ஆகிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.
6. அதோடு புழல், சென்ட்ரல் சென்று வந்தால்.. வாழ்க்கையில் "செட்டில்" ஆகிவிடலாம்.. "பெரிய கை" ஆகிவிடலாம் என்றும் சிலர் மனதில் எண்ணங்கள் விதைக்கப்பட்டுவிட்டன. இதுவும் கூட இந்த குற்றங்கள் அதிகரிக்க காரணம் ஆகிவிட்டது.
7. போதை பொருளை கலாச்சாரம் கடந்த 10 வருடங்களாகவே உயர்ந்துவிட்டது. கஞ்சா தாண்டி இப்போது 10 ஆண்டுகளுக்கு முன் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மட்டும் கிடைத்த தீவிர போதை பொருட்கள் இப்போது சென்னையிலும் கிடைக்கிறது.
8. இந்த போதை பொருட்கள் குற்றச்செயல்களை அதிகரிக்கின்றன. மன ரீதியாக கோபம், குழப்பத்தை அதிகரித்து ரவுடியிசம் அதிகரிக்கவும் காரணமாக மாறிவிடுகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications