மறைந்த எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல்- சட்டசபை ஒத்திவைப்பு: 6 நாட்கள் நடக்கும்!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த 11 முன்னாள் எம்.எல்.ஏ.க்களான கே.ரா.ராமலிங்கம், எட்மண்ட், த.ரா.ராஜாராம் ரெட்டி, என்.டென்னிஸ், ர.ச.தங்கவேல், லதா பிரியகுமார், கே.சவுரிராஜன், ப.குருசாமி, கு.பாலகிருஷ்ணன், கே.சின்னசாமி, கே.ஆர்.கணபதி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதுபோல் எம்.எல்.ஏ. பதவியில் இருந்த ஏற்காடு செ.பெருமாள் மறைவுக்கும் சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இவற்றை சபாநாயகர் தனபால் வாசித்தார்.
அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதோடு சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தை நாளைக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்த கூட்டத்தில் சஸ்பெண்ட் காலம் முடிந்ததால் தே.மு.தி.கவை சேர்ந்த 6 உறுப்பினர்களும், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த கூட்டத்தொடரை அக்டோபர் 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தொடரில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என தெரிகிறது.
வரும் 25ம் தேதி துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 30ம் தேதி நடைபெறவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications