வர்தா புயலின் தாக்கம்.. சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. பொதுமக்கள் அவதி !
சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
சென்னை: வர்தா புயலின் தாக்கத்தினால் சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நேற்று பிற்பகலில் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. இப்புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சாலைகளில் மரங்கள் அங்காங்கே முறிந்து கிடக்கின்றன.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வரும் டேங்கர் லாரிகள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பங்குகளில் இருப்பு உள்ளவரை மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படும் என்பதால் பெட்ரோல், டீசலை நிரப்ப பங்குகளில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பங்குகளில் ஜெனரேட்டர் மூலம் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் கிரெடிட், டெபிட் கார்டு மிஷின்களின் சேவை தடைப்பட்டுள்ளது. இதனால்
பெட்ரோல், டீசல் போடச் சென்றவர்கள் கார்டுகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம்களும் முடங்கியு உள்ளது. ரொக்கமாகவும் பணம் எடுக்க முடியாமலும், கார்டுகளை பயன்படுத்த முடியாததாலும் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
-
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications