அப்பா-அம்மா டைவர்ஸ்.. உதவிக்கு யாரும் இல்லாமல் தவிக்கும் அண்ணன்-தங்கை.. சோகத்தை பாருங்க!

ஆதரவற்ற அண்ணனும் தங்கையும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: "அண்ணா, இனி எங்கே போறது? நமக்கு யாரு இருக்கா" என்று அண்ணனின் கையை பிடித்து நடுரோட்டிலேயே கதறி அழுதுள்ளார் தங்கை.. இதையடுத்து நடந்த சோக சம்பவம்தான் தஞ்சையை உலுக்கி எடுத்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கரந்தையை சேர்ந்தவர் கனகராஜ்... இவரது மனைவி பெயர் காந்திமதி.. கல்யாணம் ஆகி 21 வருஷமாகிறது.. இவர்களுக்கு கரண்ராஜ் மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்குமே 18 வயதாகிறது.

ஆனால் தம்பதி இருவரும், கருத்து வேற்றுமை காரணமாக 15 வருடமாமாக பிரிந்து இருக்கிறார்கள்.. முறைப்படி டைவர்ஸ் வாங்கிவிட்டனர். குழந்தைகள் 2 பேருமே அம்மா காந்திமதியிடம் வளர்ந்தனர்.. காந்திமதி, திருவையாறில் தன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.

 நர்சிங்

நர்சிங்

வருடங்கள் உருண்டன.. பிள்ளைகள் 2 பேரும் வளர்ந்துவிட்டனர்.. கரண்ராஜ் பெயின்டிங் வேலை செய்து வந்தார்.. இந்துமதி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.. ஒருகட்டத்தில், காந்திமதியின் அம்மா வீட்டிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் காந்திமதி, பிள்ளைகளை அப்பாவிடம் போகுமாறு கூறிள்ளார்.. "எனக்கு உடம்பும் சரியில்ல, உடம்புல தெம்பும் இல்ல. இனி உங்க அப்பா வீட்டுக்கு போய் பொழச்சுங்கங்க...அப்பப்ப வந்து நானும் பார்த்துக்கிறேன்" என்றார்.

 ஆவேசம்

ஆவேசம்

இதனால், 2 பிள்ளைகளும் கனகராஜிடம் சென்றனர்.. ஆனால், அவர் அவர்களை பார்த்ததும் ஆவேசம் ஆகிவிட்டார். "இவ்வளவு நாள் எங்கே போனீங்க? இப்போ சொத்துக்காக வந்திருக்கீங்களா? இவ்ளோ நாள் எங்கே இருந்தீங்களோ, அங்கேயே மறுபடியும் போய்டுங்க.. அதுக்குதான் உங்களை அனுப்பி வெச்சாளா உங்கம்மா?'" என்று சத்தம் போட்டுள்ளார். அம்மாவும் விரட்டி விட்ட நிலையில், அப்பாவும் கைவிட்ட அண்ணன் - தங்கை இருவரும் மனம் உடைந்துள்ளனர்..

இந்துமதி

இந்துமதி

"இனி எங்கே போறது அண்ணா" என்று அண்ணனின் கையை பிடித்து கதறி அழுதுள்ளார் இந்துமதி. இதனால் கரண்ராஜும், இந்துமதியும் விஷத்தை குடித்து தற்கொலைக்கும் முயன்றனர். கொஞ் நேரத்தில் இவர்கள் இருவரும் மயங்கி விழுந்த கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து மீட்டு, மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

விசாரணை

தஞ்சை கிழக்கு போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. "உலகில் கொடியது கொடியது வறுமை கொடியது.. அதைவிட கொடியது இளமையில் வறுமை".. அது அவ்வையார் காலம் முதல் இந்த ஹைடெக் காலம்வரை தொடர்வது காலத்தின் சாபமா?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+