சிக்னல் பிரச்சனையால் தாமதமான சென்னை-அரக்கோணம் மின்சார ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்று டிரைவர் வராததால் நடு வழியில் நின்றது சென்னை-அரக்கோணம் மின்சார ரயில்.இதனால் அரக்கோணத்திற்கு அந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக சென்றது.

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 8.45 மணிக்கு மின்சார ரெயில் அரக்கோணத்திற்கு புறப்பட்டு சென்றது.

காலை 9.45 மணிக்கு அந்த ரயில் பட்டாபிராம் சென்றது.

தாமதமான ரயில் வண்டி:

தாமதமான ரயில் வண்டி:

அங்கிருந்து புறப்பட்ட ரயில் காலை 10.20 மணிக்கு கடம்பத்தூர் செல்ல வேண்டும். ஆனால் அந்த ரயில் தாமதமாக 10.45 மணியளவில் அம்பத்தூர் ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் ரயில் அங்கிருந்து புறப்படாமல் வெகு நேரமாக நின்றது. இதனால் பயணிகள் இறங்கி சென்று என்னவென்று பார்த்தனர்.

மெயின் லைன் பிரச்சனை:

மெயின் லைன் பிரச்சனை:

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று பயணிகள் விசாரித்தனர். அப்போது மெயின் லைனில் சிக்னல் இல்லாததால் ரயில் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறினார். இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

ஸ்டேசன் மாஸ்டர் பதில்:

ஸ்டேசன் மாஸ்டர் பதில்:

இதுகுறித்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்ட போது அவர் கூறியது,"மின்சார ரயில் காலை 10.20 மணிக்கு கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தால் மெயின் லைனில் அரக்கோணம் சென்றிருக்கலாம்.

தாமதத்தால் சிக்னல் இல்லை:

தாமதத்தால் சிக்னல் இல்லை:

ஆனால் தாமதமாக 10.45 மணிக்கு வந்ததால் மெயின் லைனில் சிக்னல் கிடைக்க வில்லை. 3 ஆவது லைனில் மட்டுமே சிக்னல் இருந்தது. எனவே 3 ஆவது லைன் வழியாக அரக்கோணத்துக்கு ரயிலை இயக்க வேண்டும்.

அனுமதி இல்லை:

அனுமதி இல்லை:

ஆனால் ஏற்கனவே ரயிலை இயக்கிய என்ஜின் டிரைவருக்கு 3 ஆவது லைன் வழியாக ரயிலை இயக்க அனுமதி கிடையாது. எனவே சென்னையில் இருந்து மாற்று டிரைவரை வரவழைத்தோம்" என்று கூறினார்.

பயணிகள் தவிப்பு:

பயணிகள் தவிப்பு:

இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் மின்சார ரெயில் கடம்பத்தூர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப் பட்டிருந்தது. இதனால் பயணிகள் தவித்தனர். பின்னர் மாற்று டிரைவர் வந்ததும் 1 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+