சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிப்பு: தென்னக ரயில்வே பொதுமேலாளர் தகவல்
செங்கோட்டை: மானாமதுரை வரை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார்.
செங்கோட்டைக்கு இன்று காலை தனி ரயில் மூலம் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா வருகைத்தந்தார்.
அவருக்கு தென்னக ரயில்வே பணியாளர்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்.யூ.உள்ளிட்ட தொழிற்சங்கம்,பயணிகள் நலசங்கம்,மனிதஉரிமை அமைப்புக்கள்,லயன்ஸ் கிளப்,உள்ளிட்ட அமைப்புக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.பின்னர் அவர் ரயில் ஓட்டுனர்கள்,மற்றும் அதிகாரிகள் தங்கும் விடுதியை திறந்துவைத்தார். புதிய நடைமேடை,கூடுதல் இருப்புபாதைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அடுத்த 5ஆண்டுகள் செய்யவுள்ள பணிகள் குறித்தும்.தற்போது நடைபெறும் பணிகள் குறித்தும் ஆய்வுகள் செய்தேன்.
தென்னக ரயில்வேயின் அனைத்து பிரிவு அதிகாரிகள் இந்த ஆய்வில் இடம்பெற்று உள்ளனர். செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை அமைக்கும் பணி 300கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப் பட்டது. ஆனால் இப்பணி குறிப்பிட்ட ஆண்டில் பணியை முடிக்க முடியாமல் இருப்பதற்கு...மலைகள்,பாறைகள்,நிறைந்து இருப்பதாலும்,போதிய நிதி இல்லாததாலும்,தொய்வு ஏற்ப்பட்டுள்ளது.அரசுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளோம்.போதிய நிதி ஒதுக்கிடு வந்த உடன் பணிகள் தொடங்கப்படும்.

செங்கோட்டையிலிருந்து விரைவில் சென்னைக்கு ரயில் இயக்கப்படும். தற்போது மானாமதுரையிலிருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்படும் என்றார்.
அவருடன் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர்.கோயல்,துணை கோட்ட மேலாளர் அஜித்குமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
சிலம்பு ரயில் தற்போது மானாமதுரையிலிருந்து சென்னைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 20;20க்கு மானாமதுரைக்கு புறப்படுகிறது.அதேப் போல் மானாமதுரையிலிருந்து வியாழன்,ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 20:15க்கு சென்னைக்கு புறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications