அடுத்தடுத்து கணவர், மகன், மகளை பறிகொடுத்துவிட்டு நான் மட்டும் இன்னும் இருக்கேனே: பாடகியின் தாய் கதறல
சென்னை: என் குடும்பமே போச்சு, கடவுளே என்னையும் எடுத்துக் கொள்ளக் கூடாதா என்று பாடகி ஷான் ஜான்சனின் தாய் ராணி கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்ணில் நீரை வரவழைத்தது.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பாடல் பாடி வந்தவர் ஷான் ஜான்சன்(29). மறைந்த பிரபல மலையாள திரையுலக இசையமைப்பாளர் ஜான்சனின் மகள். விவாகரத்தான ஷானுக்கு இரண்டாவது முறையாக திருமணம் நடக்கவிருந்தது.
மணப்பெண்ணாகும் முன்பு அவர் கடந்த 5ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

ராணி
ஷானின் தாய் ராணி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த 5ம் தேதி காலை அவர் மகளுக்கு பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் செய்து ஷான் என்ன செய்கிறார் என்று பார்த்து வருமாறு கூறினார் ராணி.

மரணம்
பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது தான் ஷான் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் ராணிக்கு போன் செய்து தகவல் அளித்தனர்.

கடவுளே
தகவல் கிடைத்தவுடன் பதறியடித்து வீட்டிற்கு வந்த ராணி இறந்து கிடந்த தனது மகளை பார்த்து கதறி அழுதார். பிரேத பரிசோதனையில் ஷான் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்தது.

மரணங்கள்
என் கணவர், மகன், மகள் என்று அடுத்தடுத்து என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்ட கடவுளே என்னை மட்டும் ஏன் விட்டு வைத்துள்ளாய். என்னையும் அழைத்துக் கொள் என்று ராணி கதறியழுததை பார்த்தவர்கள் கண்ணில் நீர் வந்தது.

ஜான்சன்
ஷானின் தந்தை ஜான்சன் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தனது 58வது வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதன் பிறகு ஷானின் சகோதரர் ரென் ஜான்சன் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி சென்னையில் நடந்த பைக் விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications